கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு எச்சரிக்கை! -  ஐ ஜி சுதாகர் அதிரடி  

By Dinesh TG  |  First Published Oct 20, 2022, 10:27 PM IST

சிங்கம் பட பாணியில் கஞ்சா விற்பனையாளர்கள் அனைவரையும் ஒரு வளாகத்தில் ஒருங்கிணைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட மாட்டோம் என்ற உறுதி மொழியை காவல்துறையினர் எடுக்க வைத்தனர்.  ஒரிசா திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தே தமிழகத்திற்கு கஞ்சா அதிக அளவில் கொண்டு வரப்படுவதாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் பேட்டி.


கோவை மாவட்ட பி ஆர் எஸ் வளாகத்தில் உள்ள அரங்கில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் கோவை சரக டிஐ ஜி முத்துசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

பி ஆர் எஸ் வளாகத்தில் உள்ள இந்த  அரங்கில் கோவை புறநகர் பகுதிகளில் கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகள் பலரும் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். 130 கலந்து கொண்டனர். அவர்களிடம் கஞ்சா எங்கிருந்து இவர்களுக்கு வழங்கப்படுகிறது, இதன் பின்னணியில் உள்ள நபர்கள் உள்ளிட்ட குறித்து விசாரணை செய்யப்பட்டு கலந்துரையாடல் செய்யப்பட்டது.

Latest Videos

undefined

கோயமுத்தூரில் மாணவிகளின் நலனுக்காக போலீஸ் அக்கா திட்டம் துவக்கம்!!

 இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அறிவுரைகள், மற்றும் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கான தொழில் மற்றும் உதவிகள் செய்யப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். தொடர்ந்து பேசிய அதிகாரிகள், ஒரிசா திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் கஞ்சா கடத்தி வரப்படுவது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். கோவா பெங்களூர் உள்ளிட்ட பகுதிகள் வரை தனிப்படை காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா இல்லாத கிராமங்கள் என்ற பெயரில் புறநகர் பகுதியில் உள்ள ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்டோரை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான உறுதிமொழிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். கஞ்சா விற்பனை சங்கிலி என்பது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள் வாயிலாகவும் பரவி வருவது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கஞ்சா இல்லாத தமிழகம் என்ற முதல்வரின் கஞ்சாவிற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

click me!