கோவை மாநகர காவல் துறையின் ட்விட்டர் கணக்கு ஹேக்; கிரிப்டோ கரன்சி கும்பல் கைவரிசையா?

By Dhanalakshmi G  |  First Published Oct 20, 2022, 4:24 PM IST

கோயம்புத்தூர் மாநகர காவல் துறையின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தக் கணக்கில் இருந்த க்ரிப்டோ கரன்சி தொடர்பான தகவல்கள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


கோவை மாநகர காவல் துறை தொடர்புடைய சமூகவலைதளப் பக்கங்கள் தனிப்பட்ட முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்து பதிவிடப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு கோவை மாநகர காவல் துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்தனர். அந்தப் பக்கத்தில் கிரிப்டோ கரன்சி குறித்த தகவல்களும், சம்பந்தம் இல்லாத உரையாடல்களும் இடம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை ட்விட்டர் கணக்கு "ஹேக்" செய்யப்பட்டதை அறிந்த கோவை மாநகர காவல்துறையினர் உடனடியாக அதை மீட்க முயற்சிகளை மேற்கொண்டடனர். 

pic.twitter.com/SXiXh9bIQb

— கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity)

முடக்கப்பட்ட  ட்விட்டர் பக்கத்தை 5 மணி நேரத்திற்குப் பின்னர் சைபர் கிரைம் பிரிவு போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட  ட்விட்டர் கணக்கில் க்ரிப்டோ கரன்சி கும்பல் பதிவுகள் நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாநகர காவல் துறையின் டிவிட்டர் கணக்கே ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

click me!