அழகான பெண்ணுடன் உல்லாசம்? - ரூ. 7.54 லட்சம் சுருட்டிய மர்ம நபர்! கோவை போலீசார் தேடுதல் வேட்டை!

By Dinesh TG  |  First Published Oct 20, 2022, 6:37 PM IST

அழகான இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்க லோகாண்டோ இணையதள பக்கத்தில் 7 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பறிகொடுத்த கல்லூரி மாணவர் குறித்து சைபர் கிரைம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவர்(வயது 20) மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அவரது புகாரில், ''நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறேன். எனக்கு நீண்ட நாட்களாக அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நண்பர் ஒருவர் இணையதளத்தில் தேடினால் அழகான பெண்கள் கிடைப்பார்கள் என்று கூறினார். இதையடுத்து, நான் லோகாண்டோ இணையதளத்திற்கு சென்று உல்லாசமாக இருக்க அழகான பெண்கள் எங்கு கிடைப்பார்கள் என்று தேடினேன்.

அதில் சில அழகான பெண்களின் கவர்ச்சி படத்துடன் ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்தால் முழு இரவு அழகான இளம்பெண்ணுடன் நட்சத்திர ஓட்டலில் பாதுகாப்பாக ஜாலியாக இருக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து அதில் உள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன். அதில் பேசிய நபர் தன்னை குமார் என அறிமுகம் செய்து கொண்டார்.

கோயமுத்தூரில் மாணவிகளின் நலனுக்காக போலீஸ் அக்கா திட்டம் துவக்கம்!!

பீளமேட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அழகான பெண்கள் இருப்பதாகவும், அங்கு உல்லாசமாகவும் இருக்கலாம் என்று கூறினார். பின்னர் சில பெண்களின் ஆபாச புகைப்படங்களை எனக்கு அனுப்பினார். அதில் எனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்து அந்த பெண்ணுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என தெரிவித்தேன். இதனையடுத்து, அந்தப் பெண் உங்களுக்கு வேண்டும் என்றால் முன்பணமாக உடனடியாக ரூ.2,500 அனுப்ப வேண்டும் என்றார். ஜாலியாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் பணத்தை அனுப்பி வைத்தேன். பின்னர் பீளமேட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் முகவரியை கூறினார். அங்கு உள்ள அறையில் தான் இளம்பெண் இருப்பதாக கூறினார்.

இதனையடுத்து நான் அங்கு சென்றேன். பெண் இருக்கும் அறை எண்ணை கொடுக்குமாறு ஓட்டலில் இருந்து கொண்டு கேட்டேன். அதற்கு அவர் அந்தப் பெண்ணின் பாதுகாப்பு, என்னுடைய பாதுகாப்பு, அறைக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றார்.

Latest Videos

கோவை பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் கைது!

போலீசுக்கு ரூ.7.84 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி என்னிடம் இருந்து தொடர்ச்சியாக பணத்தை அனுப்ப சொன்னார். இவ்வாறாக அவர் என்னிடம் இருந்து ரூ.7 லட்சத்து 84 ஆயிரம் பணத்தை பெற்று என்னை ஏமாற்றி விட்டார். அதன் பின்னர் அவரது எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே ஆசை வார்த்தை கூறி என்னை ஏமாற்றி மோசடி செய்த நபரை கைது செய்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும்'' என்று வலியுறுத்தி இருந்தார்.

கல்லூரி மாணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!