கோவை மாவட்டத்தில் மனைவியுடன் சண்டை வரும்பொழுதெல்லாம் சிறுவனை சித்ரவதை செய்த இரண்டாவது கணவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் இப்ராஹிம். இவரது மனைவி சர்மதா. இவர்களுடைய ஏழு வயது மகன் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த முசாதிக் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இறந்த நிலையில் முசாதிக்குக்கும், சர்மதாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சர்மதா முதல் கணவரை பிரிந்து முசாதிக்கை திருமணம் செய்து உக்கடம் புல்லுக்காடு பகுதியில் வசித்து வந்தார். தாயுடன் ஏழு வயது சிறுவனும் வசித்து வந்த சூழலில் பள்ளி செல்ல மாட்டேன் என கூறிய சிறுவனை முசாதிக் கடந்த 15ம் தேதி காலில் தோசை கரண்டியால் சூடு வைத்துள்ளார். இதனிடையே இன்று தனது மகனை பார்க்கச் சென்ற சர்மதாவின் முதல் கணவர் சுல்தான் இப்ராஹிம், தனது மகனின் காலில் இருந்த காயத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கையை கட்டி குனிஞ்சு பேசனுமா? பத்திரிகையாளர் சந்திப்பில் திருமாவளவன் ஆவேசம்
மேலும் இது தொடர்பாக சிறுவனிடம் கேட்டபோது தாயின் இரண்டாவது கணவர் தனது காலில் சூடு வைத்ததாக கூறவே ஆத்திரம் அடைந்த சுல்தான் இப்ராகிம் சம்பவம் தொடர்பாக கோவை கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் முசாதிக்கை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முசாதிக் மனைவியுடன் தகறாறு ஏற்படும் போதெல்லாம் சிறுவனை அடித்து சித்திரவதை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இருவர் உயிரிழப்பு; ஒருவர் கவலைக்கிடம்