பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய இளைஞர் ரூ.5 லட்சம் பணமும் 10 பவுன் நகையும் கொடுத்தால்தான் திருமணம் என்று கூறியுள்ளார்.
வங்கியில் பணிபுரியும் இளம்பெண்ணை மது அருந்தச் செய்து காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கோவையில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பமான அந்தப் பெண் அந்த வாலிபர் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 27 வயது இளம்பெண் கோவையைச் சேர்ந்தவர். தனியார் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக வேலை பார்ப்பவர். கடந்த 2022ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்படும் இளைஞடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு நாட்கள் முன்பு, அந்த இளைஞர் இவரை காரில் ஆனைகட்டிக்கு கூட்டிச் சென்றுள்ளார். அங்கு ஒரு ஓட்டலுக்குச் சென்று மது அருந்திய அந்த இளைஞர் இந்தப் பெண்ணையும் வற்புறுத்தி குடிக்க வைத்துள்ளார்.
குண்டு கட்டாக தூக்கிட்டு போறத பாத்துருப்போம், இது என்ன கூண்டு கட்டி தூக்கிட்டு போறாங்க; வைரல் வீடியோ
பின்னர் மதுபோதையில் காரில் வீடு திரும்பும் வழியில், ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள மைதானத்தில் காரை நிறுத்திய இளைஞர் பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டிருக்கிறார். அதற்குப் பின் அந்த இளைஞர் மாலத்தீவு சென்றுவிட்டார். இதனிடையே இளம்பெண் கர்ப்பம் தரித்திருக்கிறார்.
அந்தப் பெண் தான் கருவுற்றிருப்பதை அந்த இளைஞரிடம் சொல்லி விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் திருமணம் செய்துகொள்ளாமலே கர்ப்பமாக இருப்பது வெளியே தெரிந்தால் அவமானம் என்றும் கூறி இருக்கிறார். ஆனால், அதற்கெல்லாம் சளைக்காத அந்த இளைஞர் கருவைக் கலைத்துவிடும்படி சொல்லி இருக்கிறார். அந்தப் பெண்ணும் அப்படியே செய்துள்ளார்.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் தத்தெடுக்க அனுமதிக்கக் கூடாது: குழந்தைகள் நல ஆணையம் கோரிக்கை
பின்னர் அந்த இளைஞர் ரூ.5 லட்சம் பணமும் 10 பவுன் நகையும் கொடுத்தால்தான் திருமணம் என்று தன் தந்தை கூறுவதாக அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். அப்போது இவருக்கும் வாக்குவாத்ம ஏற்பட்டுவிட்டது. இதனால், இளைஞரின் குடும்பத்தினர் இருவருக்கும் திருமணம் நடத்தும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டனர்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண், கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெண்ணின் புகார் அடிப்படையில் ஏமாற்றிய இளைஞர் மற்றும் அவரது பெற்றோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தொகுதிக்குள் கால் வைக்கக் முடியாது! கர்நாடக காங். வேட்பாளருக்கு வேட்டு வைத்த நீதிமன்றம்