Asianet News TamilAsianet News Tamil

தன்பாலின ஈர்ப்பாளர்கள் தத்தெடுக்க அனுமதிக்கக் கூடாது: குழந்தைகள் நல ஆணையம் கோரிக்கை

தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் குழந்தையைத் தத்தெடுக்க அனுமதிப்பது சட்டத்திற்கு எதிரானது என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.

Adoption by same-sex couple should not be allowed: NCPCR to SC
Author
First Published Apr 18, 2023, 4:38 PM IST | Last Updated Apr 18, 2023, 4:51 PM IST

தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பது மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பாக தற்போது நடைபெற்றுவரும் உச்ச நீதிமன்ற விசாரணையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாக்கல் செய்த இடையீட்டு மனுவில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஸ்வரூபமா சதுர்வேதி தாக்கல் செய்த மனுவில், ஒரே பாலின தம்பதியினருடன் சேர்ந்து வளர்வது குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று பல ஆய்வுகளை மேற்கோள் காட்டி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் தன்பாலின தம்பதிகள் குழந்தையைத் தத்தெடுப்பதை அங்கீகரிக்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளை தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு

Adoption by same-sex couple should not be allowed: NCPCR to SC

“ஒரே பாலின தம்பதிகளை தத்தெடுப்பதை அனுமதிப்பது குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிப்பதற்கு ஒப்பானது. ஓரினச்சேர்க்கை தம்பதிகள் தொடர்பாக முறையான சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. “ஒரே பாலினப் பெற்றோரால் வளர்க்கப்படுவது. அந்த குழந்தைகளின் பாலினத்திற்கு உரிய குணங்கள் மற்றும் அடையாளங்கள் பற்றிய புரிதலை பாதிக்கக்கூடியது.

இந்தக் குழந்தைகளின் வெளிப்பாடு குறைவாக இருப்பதுடன் அவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சி பாதிக்கப்படும். சமத்துவத்திற்கான உரிமை என்பது சமத்துவத்தை சமன் செய்வதில்லை என்று கூறியுள்ள ஆணையம், இருவேறு பாலினங்களைச் சேர்ந்தவர்கள்தான் குழந்தைகளைத் தத்தெடுக்கலாம் எனவும் வலியிறுத்தியுள்ளது.

1990 செப்டம்பரில் நடைமுறைக்கு வந்து 195 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு உலகிலேயே மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட  உடன்படிக்கையாக இருக்கும் ஐநாவின் குழந்தை உரிமைக்கான உடன்படிக்கையில்கூட ஒரே பாலினத்தவர்கள் குழந்தையை தத்தெடுக்க முடியும் என்று குறிப்பிடவில்லை என ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. சிறார் நீதிச் சட்டத்தின்படி, ஒரே பாலின ஜோடி குழந்தையைத் தத்தெடுக்கத் தகுதியற்றவர்கள் என்றும், ஓரினச்சேர்க்கையாளர்கள் குழந்தையைத் தத்தெடுக்க அனுமதிப்பது சட்டத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios