கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கடன் தொல்லையால் பாறைக்குழியில் விழுந்து வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பிரிவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 69). இவரது மனைவி மல்லிகா (58). இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். வாடகை வீட்டில் வசிக்கும் இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். வயது முதிர்வு காரணமாக மாரிமுத்து வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
போலீசாரின் கண்களில் மிளகாய் பொடி தூவி 2 குற்றவாளிகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு
undefined
மல்லிகா மட்டும் அவ்வபோது கிடைக்கும் வேலைகளை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இதனால் குடும்ப செலவிற்கு போதிய பணம் இன்றி கடன் வாங்கியதாக தெரிகிறது. மேலும் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் கடன் சுமையில் இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் காணப்பட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணியை 2 கி.மீ. தூக்கி சென்ற பொதுமக்கள்; பச்சிளம் குழந்தை உயிரிழந்ததால் பொதுமக்கள் சோகம்
இந்நிலையில் நேற்று ஏழூர் பகுதியில் உள்ள பாறைக்குழியில் இருவரின் உடல்கள் மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் கிணத்துக்கடவு காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இருவரும் சாணி பவுடர் குடித்துவிட்டு அதன் பின் பாறைக்குளியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.