தொட்ட துறைகளில் எல்லாம் உச்சம் தொட்டவர் கலைஞர்' அமைச்சர் சாமிநாதன் புகழாரம்

By Velmurugan s  |  First Published Nov 1, 2023, 9:19 PM IST

தொட்ட துறைகளில் எல்லாம் உச்சம் தொட்டவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் புகழாரம் சூட்டி உள்ளார்.


கோவை மாவட்டம் வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு இதழாளர்-கலைஞர் சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கை விழாக்குழு தலைவர் அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் இதழாளராக எவ்வாறு பணியை மேற்கொண்டார், ஜனநாயக்கத்தின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகைத்துறை தர்மத்தை எவ்வாறு காப்பாற்றினார். மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய சிறந்த பத்திரிகையாளராக பணியாற்றியது உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் போதை ஓட்டுநரால் பறிபோன முதுகலை பட்டதாரியின் உயிர்

Tap to resize

Latest Videos

தொட்ட துறைகளில் எல்லாம் உச்சம் தொட்டவர் கலைஞர். ஒரு மாதம் நடத்தப்படும் இக்கண்காட்சி தற்போது 14 நாட்கள் நிறைவடைந்துள்ளது. கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்ளை சேர்ந்த மக்களும் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். நவம்பர் 21-ம் தேதி அவிநாசி சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கருத்தரங்கு நடத்த திட்மிடப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தமிழ் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை வழங்குதல். அகவை முதிர்ந்த தமிழரிஞர்களுக்கு பேருந்தில் இலவச பயணம் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. வணிக வளாகம், அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்திலும் தமிழில் பெயர் இருக்க வேண்டும். இதுகுறித்த ஆய்வுக்கூட்டம் ஓரிறு நாட்களில் நடத்தப்படும். போலி பத்திரிகைகளை ஒழிக்க பத்திரிகைத்துறையை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.

click me!