அதிமுகவின் தொடர் வெற்றியால் கோவை புறக்கணிக்கப்படுகிறது பொள்ளாச்சி ஜெயராமன் ஆதங்கம்

Published : Nov 01, 2023, 09:57 AM IST
அதிமுகவின் தொடர் வெற்றியால் கோவை புறக்கணிக்கப்படுகிறது பொள்ளாச்சி ஜெயராமன் ஆதங்கம்

சுருக்கம்

அதிமுகவின் தொடர் வெற்றியால் கோவை தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டி உள்ளார்.

கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பங்கேற்காமல் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை மாநகர மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றி செல்வன், கோவை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், சிங்காநல்லூர் ஜெயராமன், கவுண்டம்பாளையம் பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை வடக்கு அம்மன் அர்ச்சுணன், சூலூர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டமானது சுமார் 3 மணி நேரம் நடைப்பெற்றது. 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கு பெறாதது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. பதில் கூற அதிகாரிகளும் வரவில்லை. மேலும் கண்துடைப்பிற்காக நடத்தப்பட்ட கூட்டமாக தான் இருந்தது. கோவை மாவட்டம் தொடர்ந்து புறகணிக்கப்பட்டு வருவதற்கு சான்று மாவட்ட ஆட்சியரே கூட்டத்திற்கு வராதது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதும், மீண்டும் அதிமுக வெற்றி பெரும் என்பதால் எந்த வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட 500, ஆயிரம் கோடி பணத்தை வீண் அடித்துள்ளனர். பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் புறநகர் சாலைகள் கைவிடப்பட்டதே உதரணமாக உள்ளது.  அத்திகடவு குடிநீர் திட்டம் இன்னும் நிறைவேற்றபடவில்லை என்று குற்றம் சாட்டினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?