பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதித்துள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன். இவர் பாஜக தேசிய மகளிர் அணி செயலாளராகவும் உள்ளார். தமிழக பாஜகவில் செல்வாக்கு மிக்க பெண் தலைவராக உள்ளார் வானதி. தேசிய அளவிலும் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார் வானதி சீனிவாசன்.
இந்த நிலையில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், பாஜக எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிறகு இதனையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் தான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது பாஜக தொண்டர்களிடையே கவலையை உண்டாக்கி உள்ளது.