கோவையில் ரியல் எஸ்டேட் துறையினரிடம் பேசிய சத்குரு பழங்காலத்தில் கட்டப்பட்ட அரண்மணைகளைப் போல இப்போதும் கட்டினால் பேரழிவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
உலகின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தை மட்டுமே இந்தியா கொண்டிருக்கிறது. ஆனால் உலக மக்கள்தொகையில் 17.2 சதவீதம் பேர் நம்மிடம் உள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்த 15 ஆண்டுகளில் 20% ஐ எட்டும். ஆனால் அவர்களுக்காக நிலப்பரப்பு அதிகரிக்கவில்லை.
கோவையில் நர்விகேட் 2023 (NARVIGATE 2023) என்ற பெயரில் 1,200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ரியல் எஸ்டேட் துறை மாநாடு நடைபெற்றது. இதில் சத்குரு கலந்துகொண்டு பேசும்போது, “கடந்த காலத்தில் எப்படி அரண்மனைகளைக் கட்டினார்களோ, அதுபோல் இப்போது நாமும் கட்டினால், நமக்குப் பெரும் பேரழிவு ஏற்படும்" என்றார்.
undefined
கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி பெறுவதில் உள்ள பிரச்சினைகள் பற்றி கடுமையாகச் சாடிய சத்குரு, அனைவரையும் குற்றவாளிகளாக நடத்தும் முறை குறித்து கேள்வி எழுப்பினார். “ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் புதிய திருத்தங்களைக் கொண்டுவந்து குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். கிராமம், நகரம், பெருநகரம் ஆகிய பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கான சட்டங்களை வகுத்து, அவை என்னென்ன என்பதைச் சொல்லுங்கள். பெரும்பாலோர் அந்தச் சட்டத்தின்படியே செயல்ம்படுவார்கள். 2 சதவீதம் பேர்கூட சட்டத்தை மீறமாட்டார்கள். ஆனால் இப்போது அனைவரும் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். ஒரு கட்டிட அனுமதி பெற 14 சான்றிதழ்கள் தேவை." எனக் கூறினார்.
ரயில் நிலைய டிவியில் பட்டப்பகலில் ஆபாச வீடியோ ஒளிபரப்பானதால் அதிர்ச்சி!!
கட்டுமானத் துறையினர் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் எப்படி பங்களிக்க முடியும் என்று கேட்டதற்கு, சத்குரு பதிலளித்தார். “இதுபோன்ற சங்கங்கள்தான் மிகவும் முக்கியமானவை. ரியல் எஸ்டேட் துறையினரின் உரிமைகள் என்னென்ன என்பது குறித்து ஆய்வு செய்ய நீங்கள் ஏன் இரண்டு புதிய நபர்களை அமைக்கவோ அல்லது வேலைக்கு அமர்த்தவோ கூடாது? நீங்கள் என்ன செய்ய முடியும்?... நாடு முழுவதும் - ஒவ்வொரு மத்தியிலும் மாநில அளவிலும் சரியான பிரதிநிதித்துவத்தை உருவாக்குங்கள்..." என்று குறிப்பிட்டார். "அனைவரும் செழிக்க வேண்டும் என்றால், இதைப் புரிந்துகொள்ள வேண்டும். தொழில் செழிக்கவில்லை என்றால், நீங்கள் செழிக்கப்போவதில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
இடம்பெயர்வு அதிகரித்துவரும் சூழலில் நகரமயமாதல் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை சரியான சமநிலையில் பேணுவது குறித்த கேள்விக்கு பதில் கூறிய சத்குரு, மக்கள் வாழ்வாதாரம் இல்லாததால் புலம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளதை எடுத்துரைத்தார். இப்பிரச்சினையைச் சமாளிப்பதற்குத் தேவையான அளவு திறன் மையங்களை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இளைய தலைமுறையினரிடம் உள்ள திறமைக் குறைபாடு வெடிப்பதற்குத் தயாராக உள்ள ஒரு டைம் பாம் என்று சத்குரு சொன்னார்.
என்னது... தகுதி உள்ளவங்களுக்கு மட்டுமா? அனைத்து மகளிருக்கும் ரூ.29,000 கொடுங்க! அண்ணாமலை அதிரடி
“இப்போது நாட்டில் 15-16 வயதை எட்டியவர்கள் குறைந்தபட்சம் 8 முதல் 10 மில்லியன் பேர் இருக்கவேண்டும். அவர்கள் தாங்கள் படித்தவர்கள் என்று நினைக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு 2+2 கூட்டல் கணக்கைக்கூட செய்ய முடியாது. அவர்களுக்கு எந்த விதமான திறமையும் இல்லை, கல்வியும் இல்லை, பல்கலைக்கழகம் செல்வதும் இல்லை. இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய டைம் பாம் போன்றது. ஏனென்றால் திறன் இன்மையால் வேலைவாய்ப்பு இல்லாமல் போகும்போது குற்றச் செயல்கள் அதிகரிக்க நேரிடும்." என்றார்.
“தேசம் என்பது கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் சாலைகளால் மட்டும் ஆனது அல்ல. சிறந்த மனிதர்களை உருவாக்குவதால்தான் ஒரு பெரிய நாடாக உருவாகிறது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், திறன்கள் அடிப்படையில், சிறந்த மனிதர்களை உருவாக்கினால், அந்த நாடு சிறப்பாக இருக்கும்” என்றும் சத்குரு கூறினார்.
வசூல் வேட்டை நடந்திய டாஸ்மாக்! அடுத்த டார்கெட் 50 ஆயிரம் கோடி!