கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர்கள் அலெக்ஸ் ஜோசப் (வயது 20), சல்மான் (20). இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பட்ட படிப்பு படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அறையில் இருந்து அலெக்ஸ் ஜோசப் மற்றும் சல்மான் ஆகிய இருவரும் டீ குடிப்பதற்காக நள்ளிரவு 2 மணிக்கு தனது நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு மலுமிச்சம்பட்டி நோக்கி பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர்.
டீ குடித்துவிட்டு மீண்டும் அறைக்கு வருவதற்காக அருகில் உள்ள சேவை சாலையில் அதிவேகமாக வந்துள்ளனர். அப்போது திடீரன கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர தடுப்பின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
துரோகம் செய்த கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொன்ற ஆட்டோ ஓட்டுநர் கைது
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மதுக்கரை காவல் துறையினர் மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிபோதையில் விபரீதம்; கட்டிட தொழிலாளி தலை துண்டித்து கொடூர கொலை