கனமழை எதிரொலி; பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு - மாணவர்கள் குஷி

By Velmurugan s  |  First Published Jul 15, 2024, 11:20 PM IST

கனமழை எதிரொலியாக கோவை மாவட்டம் வால்பாறையில் செவ்வாய் கிழமை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

போர் அடித்த தமிழ்நாடு போலீஸ்? இந்த முறை ஆந்திரா போலீசில் சிக்கும் TTF? திருப்பதியில் வழக்கு பதிவு

Tap to resize

Latest Videos

அதே போன்று கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் என மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்து இருந்தது.

எனக்கு தெரிந்ததெல்லாம் சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி மட்டும் தான்; வரலட்சுமியின் கணவர் கலகல பேச்சு

இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருவதால் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய் கிழமை விடுமுறை விடப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

click me!