டி.என்.பி.எல். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர்களின் திடீர் ஈஷா விசிட்! காரணம் என்ன தெரியுமா?

By SG Balan  |  First Published Jul 14, 2024, 6:37 PM IST

"ஈஷாவிற்கு எப்போது வந்தாலும் மிக அருமையாக இருக்கிறது. இந்த அனுபவத்தை வெறும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது" என திண்டுக்கல் அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.


டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் கோவை ஈஷா யோகா மையத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். ஈஷா தரும் அனுபவம் வார்த்தைகளில் விவரிக்க இயலாது என்றும் கூறியுள்ளனர்.

கோவை ஈஷா யோக மையத்திற்கு டிஎன்பிஎல் (TNPL) டி20 கிரிக்கெட் தொடரில் ஆடும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் இன்று (12/07/2024) வருகை புரிந்தனர். அப்போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பயிற்சியாளர் திரு. குரு கேதார்நாத் அவர்கள் "ஈஷாவின் சூழல் தரும் அனுபவம் வெறும் வார்த்தைகளில் கூற முடியாது, அதனை உணரத் தான் முடியும்" எனக் கூறினார்.

Tap to resize

Latest Videos

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) எனும் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான போட்டிகள் இம்மாதம் துவங்கி தமிழகத்தின் முக்கிய நகரங்களில்  நடைப்பெற்று வருகிறது. 

இந்நிலையில் TNPL தொடரில் ஆடும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் சக வீரர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழு ஈஷாவிற்கு வருகை புரிந்தனர். அவர்கள் ஈஷாவில் சூர்யகுண்டம், லிங்கபைரவி, தியானலிங்கம் மற்றும் ஆதியோகி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தனர். 

திண்டுக்கல் அணியின் பயிற்சியாளர் இவ்வருகை குறித்து கூறுகையில், "தற்போது TNPL தொடரில் ஆடி வருகிறோம். லீக் விளையாட்டுகளில் ஆடுவதற்காக கோவை வந்துள்ளோம். ஈஷாவிற்கு எப்போது வந்தாலும் இந்த மொத்த சூழலுமே மிக அருமையாக இருக்கிறது. அதனால் அமைதியாகவும், மன குவிப்புத்திறன் அளிக்க கூடியதாகவும் மற்றும் மிகவும் ரிலாக்ஸாகவும் இருக்கிறது. இது எங்களுக்கு எப்போதும் உதவியாக இருக்கும். இந்த அனுபவத்தை வெறும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதனை உணரத்தான் முடியும்" எனக் கூறினார். 

கோவை ஈஷா யோகா மையம்,  தமிழகத்தில் மிக முக்கிய ஆன்மீகத் தலமாக இருந்து வருகிறது. ஈஷாவிற்கு ஆண்டுதோறும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து ஆதியோகியை தரிசிக்கவும், யோகப் பயிற்சிகள் மேற்கொள்ளவும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

click me!