பாபர் மசூதி இடிப்பு தினம்… கோவை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!

By Narendran SFirst Published Dec 5, 2022, 9:08 PM IST
Highlights

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் பதற்றமான பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகள் முழுவதிலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாரம்பரம் அருகே சிக்னல் கோளாறு! - மின்சார ரயில்கள் நிறுத்தம்!

மேலும் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையம் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் சோதனைகளை தீவிர படுத்தியுள்ளனர். இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் மிகப் பிரதான ரயில் நிலையங்களில் ஒன்றான கோவை மத்திய ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: சென்னை மாநாகர் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள்!

வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உள்ளிட்டவற்றின் உதவியோடு காவல்துறையினர் ரயில் நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் பயணிகள் அனைவரும் முழுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவதும் வெளியே அனுப்பப்படுவதும் என நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

click me!