சமூக வலைதளங்கள் முன்னேற்றத்தை மிகவும் பாதிக்கும்… ஏ.எஸ்.ராஜன் கருத்து!!

By Narendran SFirst Published Dec 4, 2022, 4:55 PM IST
Highlights

சமூக வலைதளங்களில் அதிகப்படியான நேரத்தை செலவழிப்பது முன்னேற்றத்தை மிகவும் பாதிக்கும் என சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவலர் பயிற்சி அகடமியின் இயக்குனர் ஏ.எஸ்.ராஜன் தெரிவித்துள்ளார். 

சமூக வலைதளங்களில் அதிகப்படியான நேரத்தை செலவழிப்பது முன்னேற்றத்தை மிகவும் பாதிக்கும் என சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவலர் பயிற்சி அகடமியின் இயக்குனர் ஏ.எஸ்.ராஜன் தெரிவித்துள்ளார். கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாணவ மாணவியருடனான  கலந்துரையாடல் நிகழ்வில் சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவலர் பயிற்சி அகடமியின் இயக்குனர் ஏ.எஸ்.ராஜன் கலந்து கொண்டு சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது குறித்தும், அதை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் மாணவ மாணவியருடன் கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கல்விதுறை, மருத்துவதுறை போல காவல் துறையும் சேவை மனப்பான்மையுடன் இருக்கும் துறை. காவல் அதிகாரிகளாக 20 சதவீதம் வரை பெண்கள் வந்து உள்ளனர். தமிழகத்தில், மருத்துவதுறையை போல காவல் துறையிலும் ஏராளமான பெண்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். காவல் துறையில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கின்றது.

இதையும் படிங்க: முதலமைச்சர் செல்லும் பாதையில் வாகன தணிக்கை..! வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி எஸ் ஐ ?அதிரடியாக கைது செய்த போலீஸ்

நீதி துறையின் முதல்கட்டமே காவல் துறைதான், இதில் விருப்பு வெறுப்பு இல்லாமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும். பெண்களால் காவல் துறையில் சிறப்பாக செயல்பட  முடியும். பிற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படுகின்றது. தமிழகத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிறைய  வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது. தமிழகத்தில் இருந்து ஐபிஎஸ் அதிகாரிகள் வருவது குறைந்துள்ளது உண்மைதான். டாக்டராக வேண்டும் வெளிநாடு போக வேண்டும் என்ற எண்ணங்களும் ஒரு காரணம். ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு முயற்சிப்பவர்களிடம் கலந்துரையாடல் குறைந்து விட்டது. புதுமையான சிந்தனைகள் குறைந்த இருக்கின்றது. மேலும் கேள்வி முறைகளும் மாறிஇருக்கிறது. பக்கத்து மாநிலங்களை பற்றி கூட முதலில் தெரியாமல் இருந்தநிலை மாறி தற்போது உலகம் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டி நிலை இருக்கின்றது. ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தற்போது புதிய பயிற்சிகள் அளிக்கபடுகின்றது. தொழில் நுட்ப ரீதியாக கையாள்வது, ஊடகங்களை  கையாள்வது, கடலோர மாநிலங்களில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல், சைபர் கிரைம் தொடர்பான பணிகள் ஆகிய புதிய பயிற்சிகள் கொடுக்கபடுகின்றது.

இதையும் படிங்க: 16 மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை..! மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை- வானிலை ஆய்வு மையம்

மேலும் 6 விதமாக பகுதிகளாக மக்களை பிரித்து எந்த மாதிரியான  அதிகாரிகளை மக்கள்  விரும்புகின்றனர் என ஆய்வு நடத்தப்படுகின்றது. காவல் துறையில் இருந்தவர்கள், 10 ஆண்டு ஐபிஎஸ் பணிபுரிந்த அதிகாரிகள், பொது மக்கள், மீடியா, நீதித்துறை, என்ஜிஓ என அனைவரிடமும் கருத்து கேட்கபட்டு அதன் அடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணி முறைகளில்  மாற்றம் செய்யப்படுகின்றது. விடுதலை அடைந்ததில் இருந்து இது வரை 40 ஆயிரம்  போலீசார் உயிரிழந்து இருக்கின்றனர். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள், நேரத்தை எப்படி செலவிட வேண்டும் என்பதற்காக இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது. சமூக வலைதளங்களில் அதிகப்படியான நேரத்தை செலவழிப்பது முன்னேற்றத்தை மிகவும் பாதிக்கும். அதை அறிவை வளர்த்து கொள்ள மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

click me!