உலக நாடுகள் பலவும் சிக்கல்களின் தீர்வாக இந்தியாவை பார்க்கின்றன - ஆளுநர் ரவி பெருமிதம்

Published : May 13, 2023, 04:18 PM ISTUpdated : May 13, 2023, 04:19 PM IST
உலக நாடுகள் பலவும் சிக்கல்களின் தீர்வாக இந்தியாவை பார்க்கின்றன - ஆளுநர் ரவி பெருமிதம்

சுருக்கம்

உலக நாடுகள் பலவும் சிக்கல்களுக்கான தீர்வுக்கான நாடு என இந்தியாவை எதிபார்ப்புடன் பார்ப்பதாக கோவை தனியார் பலகலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

G20 மாநாட்டின் ஒரு பகுதியாக CIVIL 20 SUMMIT (C20) என்ற தலைப்பில் கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில்  தொழில் நுட்பம் மற்றும் பாதுகாப்பு  தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருதினராக பங்கேற்ற  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குத்து விளக்கேற்றி கருத்தரங்கினை துவக்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த உலகம் பல சவால்களை சந்தித்து வரும் வேளையில் குளோபல் கிளைமேட் போன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளன. கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத பல போர்களால் இந்த உலகம் போராடி வருகிறது. 

அறிவியல், தொழில் நுட்பம் மேலும் வளர்ச்சி பெற வேண்டும். அறிவியலும், தொழில்நுட்பமும் மருத்துவர் மற்றும் குற்றவாளி ஆகிய இருவர் கையிலும் இருக்கும் கத்தி போன்றது. அதனை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உலகம் பல வித  கருத்துக்களால் பிரிந்து கிடக்கும் சூழலில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தான் இப்போதைய தேவை. உலக நாடுகள்  பலவும் சிக்கல்களுக்கான தீர்வுக்கான நாடு என இந்தியாவை எதிபார்ப்புடன் பார்க்கிறது.

சேலத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவரை துரிதமாக விரைந்து வந்து காப்பாற்றிய காவலர் 

கொரோனாவுக்கு உலகம் முழுவதும் தடுப்பூசிகள் கொடுத்தது தான் இந்தியாவின் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனவும் மேற்கோள் காட்டினார். இன்று வறுமை, கல்வி, வேலையின்மை ஆகியவை பெறும் சவாலாக உள்ளது. இன்று நம்மிடம் சிறந்த கல்வி கொள்கை உள்ளது. ஒவ்வொரு அரசின் திட்டமும் மக்களின் நலன் சார்ந்ததே. டிஜிட்டல் இந்தியா என கூறிய போது பலரும் வியப்படைந்த நிலையில் இன்று உலக அளவில் அதிகமாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தும் நாடு இந்தியா தான் என்று பெருமிதம் கொண்டார்.

மகளிருக்கான அதிகார மேம்பாடு குறித்து பேசுகிறோம் ஆனால் தமிழ்நாட்டில் 15,000 பெண்  வாக்காளர்கள் ஆண் வாக்காளர்களை விட அதிகமாக உள்ளனர் எனவும் எனக்கு வந்த தரவுகள் மூலம் அதிகாரப்பூர்வமாக இதனை கூறுகிறேன் எனவும் தெரிவித்தார்.இதேபோல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பலனாக  இன்று நமது உணர்ச்சிகள் அனைத்தையும்  எமோஜிகளால் வெளிப்படுத்தபட்டு வருகிறது. 

சேலத்தில் ஓடும் ரயிலில் போலீஸ்காரர் மீது 15 கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல்

தாவரங்கள், விலங்குகளையும் நாம் கருத்தில் கொண்டு தொழில் நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும். தொழில் நுட்பம் என்பது மக்கள் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும். 2014 இல் குறைந்த தொழில் முனைவோர் இருந்த சூழலில் இன்று ஆயிரம் மடங்கு அதிகரிந்துள்ளது. 2070ல் கார்பன் இல்லா உலகமாக மாற வேண்டும் என்றும் ஆளுநர் ரவி கேட்டு கொண்டார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?