9 கோடி ரூபாய் நட்டத்தில் இருந்த கைதறி துறை 20 கோடி ரூபாய் லாபத்தில் இயங்குகிறது - அமைச்சர் பெருமிதம்

By Velmurugan s  |  First Published May 12, 2023, 4:01 PM IST

கடந்த ஆண்டில் 9 கோடி நட்டத்தில் இயங்கி வந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை தற்போது 20 கோடி ரூபாய் லாபத்தில் இயங்குவதாக அத்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.


கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள லூம் வேர்ல்டு வளாகத்தில் ஹேண்ட் லூம்ஸ் ஆப் இந்தியா (Handlooms of India) விற்பனையகம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் பாலமுருகன் புதிய விற்பனை நிலையத்தை  தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் காந்தி, எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

பேட்டிக்கு முன்பாக மத்திய அரசை திட்டவில்லை என்றால் தான் நிற்பேன் என நகைச்சுவையுடன் வானதி சீனிவாசன் கூற, அமைச்சர் ஏதும் கூற மாட்டேன் என நகைச்சுவையுடன் கூறியதால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.

Latest Videos

undefined

ஆளுநர் தமிழிசையின் செயல்பாடு அனைத்தும் விளம்பரத்திற்கானதே - முன்னாள் முதல்வர் விமர்சனம்

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்  காந்தி, கைத்தறி துறை மற்றும் நெசவாளர் முன்னேற்றத்திற்கு முதல்வர் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். நெசவாளர் முன்னேற்றத்திற்கு அனைத்து நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கிறது. தமிழ் நாட்டில் முன்பு 18 ஆலைகள் இருந்ததாகவும் இப்போது 6 தான் உள்ளன. இரண்டு ஆண்டுகளாக கைத்தறி துணிநூல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்பட்டு வருகிறது. 

மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர்; காப்பாற்ற யாரும் முன் வராததால் பலியான சோகம்

பழைய மாடல்களை மாற்றி நவீனப்படுத்தி இருக்கின்றோம். கைத்தறி துணிநூல் துறை கடந்த ஆண்டு 9 கோடி ரூபாய்  நஷ்டத்தில் இருந்த சூழலில் தற்போது 20 கோடி ரூபாய்  லாபத்துடன் இந்த துறை இயங்கி வருகின்றது. டெக்ஸ்டைல் துறையில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் கோவை இருக்கிறது. NTC ஆலைகள் கொரோனாவுக்கு பிறகு திறக்கப்படாதது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, எனக்கே NTC இல் அனுமதி தர மாட்டேன் என்கிறார்கள் என நகைப்புடன் கூறினார்.

அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,  NTC தொடர்பாக கொள்கை முடிவு எடுத்து தீர்வு காணப்படும் என கூறினார்.

click me!