மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர்; காப்பாற்ற யாரும் முன் வராததால் பலியான சோகம்

By Velmurugan sFirst Published May 12, 2023, 2:30 PM IST
Highlights

கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்ட் அடிக்கும் போது தவறி விழுந்தவருக்கு உதவ யாரும் முன்வராததால் காயமடைந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. முரளி, சந்திரன்(வயது 50), ஹரிதாஸ் ஆகிய மூவரும் வழக்கம் போல் இன்று காலை 9.30 மணிக்கு வேலைக்கு வந்துள்ளனர். உயரம் அதிகம் என்பதால் மரப்பலகையில் கயிறு கட்டி அதில் தொங்கியவாறு பெயிண்ட் அடிக்கும் பணியை துவங்கி உள்ளனர். 

பலகையில் சந்திரன் தொங்கியபடி பெயிண்ட் அடித்து உள்ளார். மற்ற இருவரும் கயிரை பிடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் தலைகீழாக விழுந்து உள்ளார். நான்கு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்தவரின், தலையின் பின்பகுதி சுவற்றில் மோதியதில், உயிருக்கு ஆபத்தான நிலையில், கவலைக்கிடமாக இருந்துள்ளார். உடன் வேலை செய்தவர்கள் அதிர்ச்சியடைந்து பயத்தில் நடுங்கியபடி நின்று உள்ளனர். 

கோவையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நபர் 7 பேருக்கு மறு வாழ்வளித்த நெகிழ்ச்சி

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரனை ஒரு மணி நேரம் ஆகியும், குடியிருப்பு வாசிகளும் கண்டுகொள்ளாமல் விட்டதாக கூறப்படுகிறது. உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்கத நிலையில்,  நீண்ட நேரத்திற்கு பின் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து உள்ளனர். 108 ஆம்புலன்ஸில் வந்தவர்கள்  சந்திரனை பரிசோதனை செய்ததில், அவர்  இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்,டு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து காவல் துறையினர், உடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் தீவிர‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் தீம் பார்க் தண்ணீரில் விளையாடிய 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..

கீழே விழுந்து அடிபட்ட சந்திரனை உடன் பணி புரிந்தவர்களும், அப்பகுதியிலுள்ள குடியிருப்பு வாசிகளும் உடனே மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் காப்பாற்ற வாய்ப்பு இருந்திருக்கும். கீழே விழுந்தவரை ஒரு மணி நேரம் வரை கண்டுகொள்ளாமல் விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில், நடைபெற்ற இச்சம்பவம்  மனிதம் மரித்துப்போனதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

click me!