கோவையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நபர் 7 பேருக்கு மறு வாழ்வளித்த நெகிழ்ச்சி

Published : May 12, 2023, 10:39 AM IST
கோவையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நபர் 7 பேருக்கு மறு வாழ்வளித்த நெகிழ்ச்சி

சுருக்கம்

கோவையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 25). இவர் கோவையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். கடந்த 29ம் தேதி இருசக்கர வாகனத்தில் அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தொட்டிபாளையம் பிரிவு அருகில் சென்ற போது விபத்தில் சிக்கி பலத்த  காயம் அடைந்தார்.

பலத்த காயமடைந்த சீனிவாசன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருக்கு  மூளைச்சாவு ஏற்பட்டதை தொடர்ந்து  அவரது பெற்றோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தனர்.

தனியார் தீம் பார்க் தண்ணீரில் விளையாடிய 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..

கல்லீரல் சிறுநீரகங்கள் இருதயம் நுரையீரல் தோல் எலும்பு ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே. எம்.சி.எச் மருத்துவமனைக்கும். இருதயம் மற்றொரு சிறுநீரகம் தோல் எலும்பு ஆகியவை கோவையில்  உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும். நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இது இருக்கறதாலதான பொண்ணுங்க கூட ஓவராக ஆட்டம் போடுற! ஃபுல் மப்பில் தூங்கிய கணவரை கதறி அலறவிட்ட மனைவி.!
கோவையில் 3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு.. மதில் சுவரை இடித்து கையகப்படுத்துங்க.. பொதுமக்கள் கோரிக்கை!