கோவை நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம்; பெரும்பாலானோர் பங்கேற்பு

Published : May 13, 2023, 12:24 PM IST
கோவை நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம்; பெரும்பாலானோர் பங்கேற்பு

சுருக்கம்

கோவை நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தலைமையில் நடைபெற்று வருகிறது. 

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. 

குறிப்பாக நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், நிலம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்படும். அதன்படி இன்று நடைபெற்று வரும் மக்கள் நீதி மன்றத்தில் பல்வேறு மனுதாரர்கள் வருகை புரிந்து அவர்களது வழக்குகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர். 

தாலியை லஞ்சமாக கொடுத்து தந்தையின் இறப்பு சான்றிதழை கேட்ட பெண்.. வைரலாகும் வீடியோ..!

இதில் கோவை காடம்பாடி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணன் என்பவரது விபத்து வழக்கிற்கு தீர்வு காணப்பட்டு, தனியார் இன்சூரன்ஸ் மூலம் 18 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இதனை முதன்மை நீதிபதி ராஜசேகர் வழங்கினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?