கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்பட 6 பா.ஜ.க நிர்வாகிகள் மீது பந்தய சாலை காவல்துறையினர் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்து மதம் குறித்து சர்ச்சைக்குறிய கருத்துகளை தெரிவித்ததற்காக எம் பி ஆ ராசாவை கண்டித்து பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த பொதுக் கூட்டத்தில் மிரட்டும் தொணியில் பேசியதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, உள்பட பாஜக நிர்வாகிகள் கடந்த மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்து சமய அறநிலையத்துறையை சைவ, வைணவ சமய நலத்துறை என பிரிக்க வேண்டும் - திருமா அறிவுரை
undefined
இவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தொண்டர்களும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் 11 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை வரவேற்பதற்காக கோவை மத்திய சிறை வாசலில் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் 100 க்கும் மேற்ப்பட்ட தொண்டர்கள் அங்கு கூடினர்.
என் தாத்தாவை விட எங்க அப்பா ரொம்ப டேஞ்சர்.. ப்ளாஸ்பேக்கை கூறி பாஜகவுக்கு பயம் காட்டும் உதயநிதி..!
அப்போது மேள தாளங்கள் இசைக்கப்பட்டது. ஆனால் சிறை வாசலில் மேல தாளங்கள் இசைக்க காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் காவல்துறையினருடன் பாஜக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மத்திய சிறை வாசலில் லேசான பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாஜக அலுவலகம் முன்பு விடுதலையானவர்கள் ஊர்வலமாக காரில் அழைத்து வரப்பட்டல்தால் சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது .
இதனையடுத்து கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட 6 பா.ஜ.க நிர்வாகிகள் மீது ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பை ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.