கோவையில் முதல் முறையாக “லைப்ரரி ஆன் வீல்ஸ்” திட்டம்; வாசகர்கள் கொண்டாட்டம்

By Dinesh TG  |  First Published Oct 7, 2022, 4:25 PM IST

கோவையில் முதல் முறையாக “லைப்ரரி ஆன் வீல்ஸ்” என்ற பெயரில் ஆட்டோ நூலகத்தைத் தொடங்கி வைத்துள்ள கோவை மாநகர காவல் ஆணையருக்கு வாசகர்கள் பலரும் வெகுவாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 


செல்போன் மற்றும் சமூக வலைதளங்களின் தாக்கத்தால் நாளுக்கு நாள் புத்தக வாசிப்பு திறன் என்பது குறைந்து  வருகிறது. அந்த வகையில் புத்தக வாசிப்பை மேம்படுத்துவதற்காகவும் காவலர்களின் மன இறுக்கத்தை போக்கும் வகையிலும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் காவல் நிலையங்களில் நூலகங்களை கடந்த சில தினங்களுக்கு முன்  தொடங்கி வைத்தார். 

கோவையில் காட்டு யானை ஆக்ரோஷம்; இரும்பு கதவை உடைத்து அட்டூழியம்

Latest Videos

undefined

காவல் ஆணையர் தொடங்கி வைத்த இந்த திட்டத்திற்கு காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், இன்று தனியார் அறக்கட்டளை மூலம் ஆட்டோ நூலகத்தை “லைப்ரரி ஆன் வீல்ஸ்” என்ற பெயரில் தொட்கி வைத்தார். மேலும்பொதுமக்கள்  புத்தகம் அன்பளிப்பாக வழங்க பெட்டி ஆகியவற்றை தொடங்கி வைத்தார். துடியலூரைச்சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சையது என்பவரது ஆட்டோ, பயணிக்களுக்கு பயன்படும் வகையில் தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள், தினசரி நாளிதழ்கள், சானிடைசனர் மற்றும் சாக்கெட்லெட் பெட்டியுடன் வடிவமைக்கபட்டுள்ளது. 

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கோள்களின் நிலையை கண்டறிந்தவர்கள் நாம்; ஆளுநர் ரவி

இதனை துவக்கி வைத்து பேசிய பாலகிருஷ்ணனன் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாநகரம் முழுவதும் 2000 ஆட்டுக்களில் இது போன்று ஆட்டோ நூலகம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

பொது மக்களிடம் நாளுக்கு நாள் குறைந்து வரும் வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்காக காவல் ஆணையர் தொடங்கி வைத்துள்ள திட்டத்திற்கு வாசகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

click me!