கோவையில் நாளுக்கு நாள் வேகமெடுக்கும் ப்ளூ காய்ச்சல்; முக கவசம் அணிய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

By Velmurugan sFirst Published Nov 22, 2023, 12:39 PM IST
Highlights

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் ப்ளூ காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

கோவை மாவட்டத்தில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில் நாள் ஒன்றுக்கு சுமார் 50 பேர் என்ற அளவில் நோயாளிகள் ப்ளூ வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். ப்ளூ காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துநர், ஓட்டுநரை கற்களை வீசி தாக்கிய போதை ஆசாமிகள்

குழந்தைகள், முதியோருக்கு இந்த வைரஸ் தொற்று எளிதாக தாக்கலாம் என்பதால் குழந்தைகளும், முதியவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க அறவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், உடல்வலி, மூக்கில் நீர்வடிதல், தலைவலி, இருமல் பாதிப்பு உள்ளிட்டவை வைரஸ் காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம். காய்ச்சல் பாதித்தவர்கள் மருத்துவரை நாட கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

click me!