கோவையில் கார் வெடித்த சம்பவத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் 34 பேருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினர்.
கோவையில் கார் வெடித்த சம்பவத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் 34 பேருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினர். கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு காவல்துறையினரிடம் அலோசனை மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கோவை தொடர்குண்டு வெடிப்பு மீண்டும் தலைதூக்குமோ என்ற அச்சத்தில் மக்கள்; முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிர
இதனிடையே கோவை வந்துள்ள டிஜிபி சைலேந்திரபாபு காவல் அதிகாரிகளுடன் கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக காவல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் கார் வெடிப்பு வழக்கினை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற தமிழக முதல்வர் பரிந்துரைத்திருந்த சூழலில் இன்று டிஜிபி சைலேந்திரபாபு கோவையில் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் சிறப்பாக பணி புரிந்த காவலர்களை அங்கீகரிக்கும் விதமாக 15 பேருக்கு சான்றிதழும் வெகுமதியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி அறிவித்த புதிய வேலைவாய்ப்பு.. எப்போது ..? எப்படி விண்ணப்பது..? விவரம் உள்ளே
இந்த நிலையில் மேலும் 19 பேருக்கு தலா 7 ஆயிரம் ரூபாயும், சான்றிதழும் வழங்கி டிஜிபி பாராட்டினார். காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலைக் காவலர், மூத்த புகைப்படக் கலைஞர் ஒருவர் என மொத்தம் 34 பேருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த பட்டியலில் உள்ளவர்கள் உளவுப்பிரிவு சைபர் கிரைம் சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.