ஆன்லைன் செயலி மூலம் நூதன மோசடி.. ரூ.2,000 கோடி பணத்தை சுருட்டிய கும்பல்.. என்ன நடந்தது?

By Ramya s  |  First Published Dec 17, 2023, 7:19 PM IST

கோவையில், நீலகிரியில் ஆன்லைன் செயலி மூலம் நடந்த மோசடியில் பலரும் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர்.


டிஜிட்டல் பண பரிவர்த்தனிகள் அசுர வளர்ச்சி அடைந்து வரும் அதே வேளையில், நாட்டில் சைபர் குற்றங்களும்வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோவையில் ஒரு மிகப்பெரிய சைபர் கிரைம் மோசடி அரங்கேறி உள்ளது. ஈவிகோ (EVGO) என்ற தொழில் சார்ந்த  ஆன்லைன் செயலி,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது.  இந்த செயலின் நிறுவனர் வீசிஸ் தேசாய் எனவும், அவருக்கு கீழே ராக் ஸ்டா என்ற நபர் இருப்பதாக அதில தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் மூன்று கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்தியுள்ளனர்.

அதன்படி முதல் திட்டத்தில் 680 ரூபாய் முதலீடு செய்தால், நாளொன்றுக்கு 37 ரூபாய் வீதம் 35 நாட்களுக்கு 1295 ரூபாய் கிடைக்கும். இரண்டாவத் திட்டத்தில் 6000 ரூபாய் முதலீடு செய்தால் தினமும் 480 ரூபாய் வீதம்  52 நாட்களுக்கு 24,960 ரூபாய் கிடைக்கும். மூன்றாவது திட்டத்தில்  58000 முதலீடு செய்தால் தினமும் 5200 ரூபாய் வீதம் 20 நாட்களுக்கு 1,52,000 ரூபாய் கிடைக்கும் என விளம்பரம் செய்துள்ளனர்.. மேற்கண்ட திட்டங்களில் பணம் செலுத்தியவர்களுக்கான தொகையை ஈவிகோ நிறுவனம் கொடுத்து வந்துள்ளது.

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனை நம்பி தங்களது உறவினர்கள் மற்றும் அருகில் இருப்பவர்கள் என  கோவை, நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்துள்ளனர். இவர்கள் அனைவரையும் வாட்ஸ் ஆஃப் செயலி மூலம் ஒருங்கிணைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈவிகோ செயலி செயல்படவில்லை. வாட்ஸ் ஆஃப் குழு இருப்பதால், அதில் தகவல் வரும் என லட்சக்கணக்கில் பணம் செலுத்தியவர்கள் காத்திருந்தனர்.

எனினும் எந்த தகவலும் வரவில்லை என்பதால், முதலீட்டாளர் ஒருவர், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஈவிகோ நிறுவனத்திடம் மெயில் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, அது போலிச்செயலி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் ஆய்வாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் 20 பேர், சுமார் 30 லட்ச ரூபாய் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று புகாரளித்தனர். 

எனக்கு 60 வயசு ஆச்சு! ரோட்ல இறங்கிலா போராட முடியாது! திட்டங்களை நிறைவேத்துங்க!ஆ.ராசாவிடம் முதியவர் வாக்குவாதம்

பாதிக்கப்பட்ட நபர் வீரா இதுகுறித்து பேசிய போது “ இந்தியா முழுவதும் இச்செயலி மூலம் பொதுமக்களிடமிருந்து 2000 கோடிக்கு மேல் பணம் பெற்று ஏமாற்றப்பட்டிருக்கலாம். தற்போது இதே போல புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். காவல் துறை அந்த செயலியின் நிறுவனர் தேசாயை கைது செய்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும் என்றார்.

மக்களின் ஆர்வத்தை தூண்டி, ஆசைகளை வளர்த்து மோசடி செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் குறித்து காவல் துறை தொடர்ந்து எச்சரித்து வந்தாலும், இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளை நம்பி மக்கள் ஏமாந்து வருகின்றனர். எனவே பொது மக்கள் இதுபோன்ற ஆன்லைன் செயலிகளில் முதலீடு செய்யும் முன்பு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!