வரும் திங்களன்று கோவை வருகிறேன்.. மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

By Raghupati R  |  First Published Dec 15, 2023, 10:37 PM IST

மக்களுடன் முதல்வர் திட்டம் என்ற திட்டத்தைத் தொடங்கி வைக்கத் திங்களன்று கோவைக்கு வருகிறேன் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களில் ஒருவனான என்னை, உங்களுக்கான ஒருவனாக உருவாக்கி முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வைத்தீர்கள். நமக்கு வாக்களிக்காத மாற்றுச் சிந்தனை கொண்டோரும் 'தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே!' என்று என்று எண்ணும் வகையிலான மக்கள் நலன் பேணும் ஆட்சியைக் கட்டமைத்து வருகிறோம்.

Latest Videos

undefined

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை, உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடிக் கல்வி , இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, நான் முதல்வன் போன்ற நமது #DravidianModel அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்களை வந்து சேர்வதை உறுதிசெய்திட ‘கள ஆய்வில் முதலமைச்சர்' என உங்கள் மாவட்டங்களுக்கு வந்தேன்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனை இன்னும் செம்மைப்படுத்திட வேண்டுமல்லவா! உங்களின் தேவைகளும் அரசின் சேவைகளும் ஒரு குடையின்கீழ் சந்தித்து விரைவில் தீர்வுகள் கிடைத்தால் அது #DravidianModel-இன் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் என மின்னிடுமே! அப்படியான திட்டமாக உருப்பெறுகிறது #மக்களுடன்முதல்வர் திட்டம்! இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கத் திங்களன்று கோவைக்கு வருகிறேன்.

உங்களில் ஒருவனான என்னை, உங்களுக்கான ஒருவனாக உருவாக்கி முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வைத்தீர்கள்.

நமக்கு வாக்களிக்காத மாற்றுச் சிந்தனை கொண்டோரும் 'தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே!' என்று என்று எண்ணும் வகையிலான மக்கள் நலன் பேணும் ஆட்சியைக் கட்டமைத்து வருகிறோம்.

👸கலைஞர்… pic.twitter.com/tsLj09pns5

— M.K.Stalin (@mkstalin)

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இந்தத் திட்டத்தின் பயன் மக்களைச் சென்றடைய உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..

click me!