கோவை கார் வெடிப்பு விவகாரம்... கைதான 6வது நபருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!!

By Narendran SFirst Published Oct 27, 2022, 11:24 PM IST
Highlights

கோவை கார் வெடிப்பு வழக்கில் 6 ஆவதாக கைதான அப்சர்கான் என்பவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவை கார் வெடிப்பு வழக்கில் 6 ஆவதாக கைதான அப்சர்கான் என்பவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் கடந்த 23 ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுத்தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஐந்து பேரையும் உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையும் படிங்க: இஸ்லாமிய மத குருவிடம் தீவிர விசாரணை… அவரது வீட்டை சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு!!

இந்த நிலையில் 6வது நபராக அப்சர்கான் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜெ எம் 5 நீதிபதி சந்தோஷ் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் அப்சல்கானை நவம்பர் 10 ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.  இதையடுத்து போலிசார் அப்சர்கானை கோவை மத்திய சிறைக்கு அழைத்துச்சென்றனர்.

இதையும் படிங்க: விரைவில் என்.ஐ.ஏ கையில் கோவை கார் வெடிப்பு வழக்கு… டி.ஜி.பி சைலேந்திரபாபு தகவல்!!

மேலும் இந்த வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏவுக்கு முழுமையாக மாற்றப்படுகிறது. இதை அடுத்து தமிழக போலிசாரிடம் இருந்து இதுவரை இந்த வழக்கு தொடர்பான ஆவனங்களை என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வேலையில் தமிழக காவல்துறையினர் ஈடுபட்டுவருவதாக கோவையில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!