கோவை கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
கோவை கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு காவல்துறையினரிடம் அலோசனை மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டர்.
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு விவகாரம்... சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு!!
பின்னர் கார் வெடிப்பு வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கும், போலிசாருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு, என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் கார் வெடிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விரைவில் வழக்கு அவர்களில் கையில் செல்லும். அதற்கான உதவிகள் காவல்துறை சார்பில் வழங்கப்படும் என்றார். என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்கு பதிந்துள்ளனர். தமிழக காவல்துறையால் வழக்கு விசாரணை சிறப்பாக கையாளப்பட்டது. குறுகிய காலத்தில் கைது செய்யப்பட்டு 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: சாலையில் கேட்பாரற்று இருந்த கார் மற்றும் பைக்குகள்… காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை!!
அதே சமயம் 5 பேரை காவலில் எடுத்தும் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் வழக்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, அவர்கள் நடத்தும் மேல் விசாரணை ஆதரங்கள் திரட்டப்பட்டால் இந்த வழக்கில் மேலும் கைது நடவடிக்கை இருக்கும் என்று தெரிவித்தார். முன்னதாக கோவை கார் வெடிப்பு வழக்கில் சிறப்பாக பணியாற்றிய 34 காவலர்களுக்கு விருது வழங்கப்பட்டதோடு அவர்களுக்கு சான்றிதழும் வெகுமதியும் வழங்கப்பட்டது.