32 நிலையங்களுடன் 39 கி.மீ.க்கு ஓடத்தயாராகும் கோவை மெட்ரோ ரயில்; 15ல் திட்ட அறிக்கை தாக்கல்

By Velmurugan s  |  First Published Jul 1, 2023, 3:52 PM IST

கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதைத் தொடர்ந்து வரும் 15 ம் தேதி  திட்ட அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார். 


கோவையில் மெட்ரோ ரயில் செயல்படுத்துவது குறித்தும், முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப் திட்ட எண் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த நிதி  ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கபட்டுள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. வரும் 15 ம் தேதி திட்ட அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்படுகின்றது. 

Latest Videos

undefined

30 இடங்களில் வெட்டு; தலை துண்டித்து மனைவியை கொடூரமாக கொன்ற கணவர் - திருப்பூரில் பரபரப்பு

கோவை அவினாசி சாலை, சக்தி சாலை என இரு சாலைகளில் முதல்கட்டமாக திட்டம் செயல்படுத்த படுகின்றது. மொத்தம் 39 கி.மீ தூரம், 32 நிலையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. அவினாசி சாலையில் 17 ரயில் நிலையங்கள், சக்தி சாலையில் 14 ரயில் நிலைங்கள் அமைய இருக்கின்றது. இந்த பாதையில்  3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் இயக்க திட்ட மிடப்பட்டு இருக்கின்றது. திட்ட அறிக்கை தமிழக அரசிடம் கொடுத்த பின்னர், ஒன்றிய அரசின் ஒப்புதல், பன்னாட்டு நிறுவன நிதி பெற்று இந்த திட்டம் செயல்படுத்த பட இருக்கின்றது. 

கோவை அவினாசி சாலையில் பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், பாலத்தின்  இடது புறத்தில்  மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இரு பாதைகளும் உயர்மட்ட பாலமாக  செயல்படுத்தபடுகின்றது. நீலாம்பூரில் இருந்து உக்கடம் வரை அவினாசி சாலையிலும், காந்திபுரத்தில் இருந்து வளையம்பாளையம் வரை சத்தியமங்கலம்  சாலையிலும் அமைக்கப்படுகின்றது.

கடனை கட்டாததால் வீட்டு பொருட்களோடு சேர்த்து வீதியில் வீசப்பட்ட முதியவர்; பொதுமக்கள் அதிச்சி

மெட்ரோ பணிகள் துவங்கியதில் இருந்து   3.5 ஆண்டுகளில் பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் மூன்று பெட்டிகள் இருக்கும் நிலையில், ஒவ்வொரு பெட்டியிலும் 250 பேர் பயணிக்க முடியும். மெட்ரோ ரயில் திட்டம் 150 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு பயன்பாட்டை அடிப்படையாக கொண்டு திட்டமிடப்பட்டு உள்ளது. திட்டம் முழுவதும் உயர்மட்ட பாலமாகவே திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்க பாதைகள் எதுவும்  திட்டமிடப்படவில்லை எனவும் தெரிவித்தார். 

ஒரு சில இடங்களில் நில எடுப்பு இருக்கும். இந்த திட்டத்திற்காக சுமார் 75 ஏக்கர் வரை அரசு மற்றும் தனியார்  நிலம் கையகப்படுத்தப்பட இருக்கின்றது என சென்னை மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குனர் சித்திக் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து டவுன்ஹால் பகுதியில் அதிகாரிகள் சித்திக், ரமேஷ் சந்த் மீனா ஆகியோர் மெட்ரோ ரயில் திட்டம் அமைய இருக்கும் இடங்களை  நேரில் ஆய்வு செய்தனர்.

click me!