மேட்டுப்பாளையம் உதகை இடையே மகாராஜா ரயில் போன்று சிறப்பு மலை ரயில் இயக்க திட்டம் உள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர். என் சிங் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தினை ஆம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் ஆறு கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த திட்டம் தயாரிக்க பட்டு வருகிறது. நடைமேடை, முகப்பு அழகு, கட்டமைப்பு என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட உள்ளது. இந்நிலையில் இன்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர் என் சிங் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
ரயில் நிலையத்தின் பல பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர் திட்ட தயாரிப்பு பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் 64 ரயில் நிலையங்கள் அம்ரூத் பாரத் திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்தப்பட உள்ளன. மேட்டுப்பாளையம் உதகை இடையே மகாராஜா ரயில் போன்று சுற்றுலாவுக்கான சிறப்பு மலை ரயில் இயக்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் அது தமிழகத்திற்கே பெருமை - பொன்.ராதாகிருஷ்ணன்
மேலும் அந்த ரயிலை வாரத்தில் 2 அல்லது 3 தினங்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசுகையில், நீலகிரி மலை ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று விரைவில் வனப்பகுதியில் உள்ள ஆடர்லி ரயில் நிலையத்தில் கேண்டின் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சிங்கா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கலைஞர் கைது செய்யப்பட்ட போது நாயை விட மோசமாக நடத்தப்பட்டார் - நீதிபதி பரபரப்பு பேச்சு