கோவையில் பக்ரீத் பண்டிகையினை முன்னிட்டு கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை, தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை ஆகிய இரண்டும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தியாக திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை இன்று கோவையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் பக்ரீத் பண்டிகையினை முன்னிட்டு சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் பின்னர் ஆடு, மாடு போன்றவற்றை குர்பானி கொடுத்து அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், ஒரு பங்கை தங்களுக்கும் என பிரித்து மகிழ்ச்சியுடன் இந்த தியாக திருநாளை கொண்டாடி வருவதாகவும் இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.