சர்மிளாவுக்கு கமல் கார் கொடுக்கவில்லை.. பெண் டிரைவர் சர்மிளா தந்தை சொன்ன பகீர் தகவல்.!!

By Raghupati R  |  First Published Jun 27, 2023, 10:40 PM IST

கோவையைச் சேர்ந்தவர் பெண் டிரைவர் சர்மிளா. இவர் தனியார் பஸ்சை இயக்கி வந்தார். பெண் டிரைவரை பல்வேறு தரப்பினரும் வாழ்த்தி வந்தனர். கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


இன்று காலையில் தான் திமுக எம்.பி கனிமொழி, ஷர்மிளா ஓட்டி வரும் பேருந்தில் பயணித்து அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த நிலையில், சில மணி நேரங்களிலேயே அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகேஷ் என்பவரின் மகள் சர்மிளா. 

இவருக்கு வயது 24. சிறு வயது முதலே தனது தந்தை ஆட்டோ ஓட்டுவதை பார்த்து வளர்ந்ததால், இவருக்கும் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. இதனை அடுத்து தனது விருப்பத்தை தந்ததை இடம் தெரிவித்துள்ளார். தந்தையும் இதற்கு ஊக்கமளித்து 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் மகளுக்கு ஆட்டோ ஓட்டுவதற்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

Latest Videos

இதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கோவை மாநகர் பகுதிகளில் இளம் பெண் ஷர்மிளா ஆட்டோ ஓட்டி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்ட பிறகு அவரது ஆர்வம் படிப்படியாக கனரக வாகனங்களின் பக்கம் சென்றது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சிங்கப் பெண்ணாய், பேருந்தை இயக்கி வந்த காட்சிகளை பொதுமக்கள் ஒரு நிமிடம் நின்று ரசித்ததுடன், அவரை பாராட்டி வந்ததும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் பெண் ஒரு பேருந்தை ஓட்டுகிறாரா என்று ஆச்சரியத்துடன் அவரைப் பார்க்கவே அந்த பேருந்தில் பயணித்த கூட்டமும் அதிகம். கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் சர்மிளாவுக்கு கார் பரிசளித்த கமல்ஹாசன்.  இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் சர்மிளா.

பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து, சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன்.ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை.

மக்களே உஷார்.! இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு

கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார்.ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில், ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கமல்ஹாசன், சர்மிளாவை வரழைத்து அவருக்கு வாடகைக் கார் ஓட்டுவதற்காக புதிய காரை பரிசளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஷர்மிளாவை சந்தித்து கமல்ஹாசன் பேசிய புகைப்படங்கள் வைரலாகின. இந்த நிலையில் சர்மிளாவுக்கு கார் கொடுத்தது அரசியல் லாபத்திற்காக என எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்திருந்தார்.

இதுபற்றி சர்மிளாவின் தந்தை பேசும்போது, கமல் சார் கார் கொடுக்கவில்லை. கார் வாங்குமாறு அட்வான்ஸ் பணமாக ரூ 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் சோர்வடையாமல் தைரியாக இருக்க வேண்டும் என ஷர்மிளாவிடம் கூறிய கமல், உங்களை போல் நிறைய பெண்கள் முன்னுக்கு வர வேண்டும் என்று கூறினார்.

அலெர்ட்..! குடையை மறக்காதீங்க.! இன்று முதல் 4 நாட்களுக்கு மழை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

click me!