சூலூர் கொச்சின், சேலம் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி பிரேக் பிடிக்காமல் ஏறிச்சென்ற சம்பவத்தில் கணவன், மனைவி இருவரும் உடல் நசுங்கி உயிர் இழந்த சம்பவத்தின் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணி புதூரில் சேலம், கொச்சின் பைபாஸ் சாலையில் ஏராளமான சிறு சிறு விபத்துக்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 15 ஆண்டுகளாக சென்ட்ரல் மீடியேட்டர் இல்லாமல் ஒரு வழிப்பாதையாக இருக்கும் இந்த பைபாஸ் சாலையில் இன்று திருப்பூரில் இருந்து கேரளாவை நோக்கி 66 வயதான ஜெகநாதன் அவரது மனைவி 60 வயதான பாக்யலட்சுமி இருவரும் விசேஷ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கொச்சின் பைபாஸ் சிந்தாமணிபுதூர் சிக்னல் அருகே வரும் பொழுது இருசக்கர வாகனத்தை வலது புறமாக திரும்பி உள்ளனர். அப்போது பின்புறமாக வந்த லாரி அதிவேகமாக ஓட்டி வந்து பிரேக் பிடிக்காமல் பைக்கில் சென்று கொண்டு இருந்தவர்கள் மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவருமே லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பலியாகி உள்ளனர்.
பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்து அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் உடனடியாக உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் அப்பாவி இளைஞரை கட்டி வைத்து 3 மணி நேரம் கொடூர தாக்குதல்; வீடியோ வெளியாகி பரபரப்பு