
தமிழகத்தில் சென்னையை அடுத்த மிகப்பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை. இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா தனது ராஜினாமா கடிதத்தை உதவியாளர் மூலம் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரகரனிடம் வழங்கியுள்ளார். கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 97 பேர் தி.மு.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர். மேலும் மூன்று பேர் அ.தி.மு.க கவுன்சிலர்கள்.
Breaking: திமுக.வில் களை எடுப்பு நடவடிக்கை? கோவையைத் தொடர்ந்து நெல்லை மேயரும் ராஜினாமா
கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க வைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வருகிறார். இவர் மாநகராட்சி தேர்தலில் கோவையில் 19 ஆவது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராக உள்ளார். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க வில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் மேயர் கல்பனா பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தி.மு.க கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் பெரிதாக நம்பிக்கை பெறவில்லை என்று கூறப்படுகிறது.
மேடை நடனம் என்ற பெயரில் கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனம்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இதனால் தி.மு.க கட்சி கவுன்சிலர்களுக்கும், இவருக்கும் இடையில் உட்கட்சி பூசல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கட்சியின் மேலிடம் உத்தரவின் பெயரில் கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என கூறப்படுகிறது. மேயர் பதவி கல்பனாவிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலையில், இனி அந்த பதவியை கைப்பற்றும் அடுத்த தி.மு.க பெண் கவுன்சிலர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாநகராட்சி மேயர் கல்பனாவை நியமித்தது குறிப்பிடத்தக்கது.