அரசியலில் படித்தவர்களை விட அர்ப்பணிப்பு உள்ளவர்கள் தான் தேவை; நடிகர் விஜயின் கருத்துக்கு வானதி சீனிவாசன் பதில்

By Velmurugan s  |  First Published Jul 1, 2024, 3:53 PM IST

நடிகர் விஜய் சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் நடித்து இருக்கலாம், அரசியல் தலைவராக சினிமா நடிகர்கள் மாறியதற்க்கு பிறகு எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோவையில் தெரிவித்துள்ளார்.


கோவை வ.உ.சி பூங்காவில், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், சட்டமன்றத்தில் கோவை தொகுதிக்கு குரல் கொடுக்கும் போது கோவைக்கு எண்ணற்ற திட்டங்கள் கொடுத்து உள்ளதாக துறை சார்ந்த அமைச்சர்கள் கூறுகிறார்கள்.

அமைச்சர்கள் வாய்ப்பு இருந்தால் கோவைக்கு வரும் போது எனது தொகுதிக்கு வர வேண்டும். சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேச முற்படும் போது முழுமையாக பேச விடுவதில்லை. சட்டமன்றத்தில் நாங்கள் பேசிய வீடியோக்களை கேட்டால் வெட்டியும், ஒட்டியும் கொடுக்கிறார்கள். சட்டமன்றத்தில் ஜனநாயகமாக பேசவிடுவதில்லை. மேட்டுபாளையம், கோத்தகிரி சாலையில் நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் இந்தியா ஒழிக என்று  எழுதுகிறார்கள். இது கண்டிக்கதக்கது. மத்திய, மாநில அரசுக்கு பல முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் இது போன்று இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசுபவர்களை தடுக்க வேண்டும். தி.மு.க அரசு ஊக்குவிக்க கூடாது.

Tap to resize

Latest Videos

விஷசாராயத்தை விட அரசு விற்கும் மதுபானம் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது - திருமாவளவன் வருத்தம்

30 நாட்களுக்கு மேலாக நடக்கும் மானிய கோரிக்கை இந்த முறை 8 நாட்களுக்குள் முடிவடைந்தது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகம் போன்ற மிக முக்கியமான மாநிலத்திற்க்கு இந்த நாட்கள் போதது. இன்னும் மக்களின் பிரச்சினையை ஆழமாக விவாதிக்க வேண்டும். எதிர்கட்சிகள் பேசும் போது அதிக குறிக்கீடுகள் உள்ளன. சட்டமன்றத்தில் தொகுதி மக்களிக்காக பேசும் வீடியோவை கூட தர மறுக்கிறார்கள். ஜனநாயக தன்மையோடு இயங்காத சட்ட பேரவையாக சவாலோடு பேச வேண்டியதாக இருக்கிறது.

நல்ல தலைவர்கள் தமிழகத்திற்க்கு வர வேண்டும் என்றால் நடிகர் விஜய சொன்னதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. படித்தவர்களை விட மக்களுக்காக உணர்வு பூர்வமாக உழைக்க கூடியவர்கள் அரசியலில் தேவை. சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் நடித்து இருக்கலாம். ஆனால் அரசியல் தலைவராக சினிமா நடிகர்கள் மாறியதற்க்கு பிறகு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். மத்திய அரசு, கால சூழலுக்கு ஏற்றவாறு  சட்ட திருத்திங்களில் திருத்தம் கொண்டு வந்து இருந்தாலும், பெயரை பொறுத்த அளவுக்கு இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழி தெரியாதவர்களுக்கு சில வார்த்தைகளை பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. இதை மத்திய தலைமையிடம் நாங்கள் தெரிவித்து உள்ளோம்.

எல்லை மீறும் நீட் எதிர்ப்பு? கோவையில் தேசத்திற்கு எதிராக எழுதப்பட்ட வார்த்தைகளால் பரபரப்பு

சட்டத்தில் இன்று பல திருத்தங்கள் தேவை. தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் ஆளுநருக்கு எதிரான மன நிலையோடு பேசுவது உயர் கல்வி துறையில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. நானா... நீயா... என்கிற வகையில் மாநில அரசு எடுத்து கொள்கிறது. கவர்னர் பொதுவெளியில் பேசுவதை இவர்களின் சித்தாந்தத்திற்கு எதிராக பேசுவதாக எடுத்து கொண்டு, அவருக்கு எதிராக பேசுவது உயர் கல்வி துறையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. 

திராவிட மாடலில் கிக் தான் முக்கிய என்று அவர்கள் நினைக்கிறார்கள். நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். பரப்பரப்பாக பிரேக்கிங் செய்தி வரக் கூடிய பிரச்சனைக்கு மட்டும் கூடுதல் நிவாரணம் அறிவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

click me!