டாஸ்மாக் மது விற்பனையை தனியாரிடம் கொடுக்க வேண்டும்: அண்ணாமலையின் ஐடியா எப்படி இருக்கு?

By SG Balan  |  First Published Jun 30, 2024, 8:21 PM IST

டாஸ்மாக் மதுபானங்களில் கிக் இல்லை என துரைமுருகன் பேசி இருப்பது உண்மைதான் என்றும் அரசு தவறு செய்கிறது என அமைச்சர் துரைமுருகனே ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் அண்ணாமலை சொல்கிறார்.


டாஸ்மாக் கடைகளை குறைத்து மது விற்பனையை தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்றும் கள்ளு கடைகளை திறக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக அரசை வலியுறுத்தி இருக்கிறார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்   பாஜக நிர்வாகிகள்
கலந்தாய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும்  மேல்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "இந்த ஆய்வுக்கு கூட்டம் தேர்தல் நடந்த பின்பு தேர்தலில் வெற்றி பெறுவதற்காக என்ன செய்ய வேண்டும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான ஆய்வு கூட்டம்" எனக் கூறினார்.

படிச்சது 10வது தான்... டம்மி ஐ.டி. கம்பெனியை தொடங்கி லட்ச லட்சமாக அபேஸ் செய்த ஆசாமிகள்!

"தமிழக அரசின் டாஸ்மாக் குறித்த  அறிக்கையை பார்த்தால் அதில் தமிழக டாஸ்மார்க் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லை‌. டாஸ்மாக் மதுபானங்களில் கிக் இல்லை என துரைமுருகன் பேசி இருப்பது உண்மைதான். கிக் இல்லை என்பதற்காகத்தான் இதுபோன்ற செயல்களில் மது பிரியர்கள் நாடி செல்கிறார்கள். தமிழகத்தில் மூத்த அமைச்சரே இதனை ஒப்புக் கொண்டிருக்கிறார். அரசு வேலையை தவறாக செய்கிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்" என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: "ஈஷாவைப் பொறுத்தவரை யானை வழித்தடம் இல்லை என தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். வேண்டும் என்றே ஈஷாவை சிக்க வைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. சென்னையில் சுகாதாரம்  அதலபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு இதுவரை ஊதியம் தராமல் இழுத்தடித்து வரும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

முதல்வர் மானிய கோரிக்கையில் இதுகுறித்து பேசாதது ஏமாற்றம் அளிக்கிறது.  தமிழகத்தில் கள்ளு கடைகளை திறக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை தமிழகத்தில் குறைத்து விற்பனையை தனியாரிடம் கொடுக்க வேண்டும். திமுகவுக்கு அடிமையாக காங்கிரஸ் எப்போதும் இருக்கும் என்பது காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிகிறது. செல்வ பெருந்தகைக்கு வரலாறு தெரியாது. இந்திரா காந்தி குறித்து வரலாறுகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வயசு ஏறிட்டே போகுது... திருமணம் செய்து வைக்காத விரக்தியில் பாட்டியை அடித்துக் கொன்ற பேத்தி!

செல்வப் பெருந்தகை அதுகுறித்தெல்லாம் படிக்காமல் பல கட்சிகள் மாறி இன்று காங்கிரஸில் உள்ளார். விடுதலை சிறுத்தைகள் இருந்தபோது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை தாக்கியவர் செல்வப் பெருந்தகை. எனக்கு அரசியல் தெரியாது. மழைக்கு முளைத்த காளான் என அவர் தெரிவித்திருப்பது அவருக்கு அறிவு எவ்வளவு உள்ளது என்பதை காட்டுகிறது.

நடிகர் விஜய் கொதித்து எழுந்தால் ஒன்றும் ஆக போவது இல்லை. விஜய் சொல்வது போல் தமிழ் நாட்டில் நல்ல தலைவர் இல்லை. பிளஸ் டூ மாணவர்களுக்கு சைக்கிள் கொடுத்த விவகாரத்தில் 600 கோடி ரூபாய் காண்ட்ராக்ட் கொடுத்தது அமைச்சர் உதயநிதி தான். பல குறைபாடுகளுடன் சைக்கிள் மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அந்த சைக்கிளை வாங்கிச் செல்லும் குழந்தைகள் 600 ரூபாய் வரை செலவு செய்துதான் பயன்படுத்தும் அளவுக்கு தரம் இல்லாத சைக்கிள் கொடுக்கப்பட்டுள்ளது. சைக்கிள் தயாரித்து வழங்கிய நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்.

நீட் தேர்வில் இந்த ஆண்டு அதிக மாணவர்கள் வெற்றி அடைந்து உள்ளனர். 55 % வெற்றி பெற்று உள்ளனர். நீட் குளறுபடிக்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஆயத்தமாகி உள்ளது. நீட்  விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் செல்லமால் மக்களை ஏமாற்றி வருகிறது. நீட்டை பொறுத்த வரை தமிழக அரசு ட்ராமா செய்து வருகிறது. அரசியல் செய்ய தமிழக அரசு நீட்டை பயன்படுத்தி வருகிறது. மேகதாதுவில் தமிழக அரசு அனுமதி இல்லாமல் அணைக்கட்ட முடியாது, சட்டம் உள்ளது. என்றாலும் இந்த விவகாரம் தொடர்ந்து அரசியலாக்கபடுகிறது" என்று அண்ணாமலை தெரிவித்தார்.

என் பேபி... அப்பாவி பையன்... அவனை ப்ரீயா விட்ருங்க... டிடிஎஃப் வாசனுக்காக கெஞ்சிக் கேட்கும் ஷாலின் ஜோயா!

click me!