தென்னிந்தியாவிலேயே 4வது பெரிய மாநகராட்சியாக இருக்கும் கோவை மாநாகராட்சியுடன் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவிலேயே 4வது பெரிய மாநகராட்சியாக கோவை மாநகராட்சி இருந்து வருகிறது. ஏற்கனவே கடந்த 2011ல் கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டபோது, 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் ஒரு கிராம ஊராட்சி ஆகியவை இணைக்கப்பட்டு, 152 சதுர கிமீ பரப்பிலிருந்த மாநகராட்சி, 254 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்பட்டது.
இதில் பழைய மாநகராட்சி பகுதிகளுடன் குனியமுத்தூர் கவுண்டம்பாளையம் குறிச்சி வடவள்ளி துடியலூர் வீரகேரளம் வெள்ளக்கிணறு சரவணம்பட்டி சின்னவேடம்பட்டி காலப்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிகள் மற்றும் விளாங்குறிச்சி ஊராட்சி பகுதிகள் இணைக்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நகரமயமாக்கல் வேகமாக நடைபெற்று வருகிறது. 2011 ஆம் ஆண்டு மூன்று நகராட்சிகள் ஏழு பேரூராட்சிகள் ஒரு கிராம ஊராட்சி 5 மண்டலங்கள் 100 வார்டுகள் என கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவை மாநாகராட்சியுடன் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
01. வெள்ளமடை
02. அக்ரஹாரசாமக்குளம்
03. கொண்டையம்பாளையம்
04. சர்க்கார்சாமக்குளம்
05. காளிபாளையம்
06. வெள்ளானைப்பட்டி
07. கீரணத்தம்
08. குருடம்பாளையம்
09. பன்னிமடை
10. நீலம்பூர்
11. இருகூர்
12. மயிலம்பட்டி
13. பட்டணம்
14. கலிக்கநாயக்கன்பாளையம்
15. வேடபட்டி
16. சோமையம்பாளையம்
17. தீத்திபாளையம்
18. பேரூர் செட்டிபாளையம்
19. மலுமிச்சம்பட்டி
20. சீரபாளையம்.