கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4.36 அடி உயர்ந்துள்ளதால் கோவை மாநகர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழக, கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை தொடர்வதால் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.
சென்னையில் சர்வதேச போதை கும்பல்? விமான நிலையத்தில் ரூ.22 கோடி போதைப்பொருள் பறிமுதல்
சுமார் 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்த்தேக்க கொள்ளளவு 45 அடியாக வரையறுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 11.32 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து நேற்றைய தினம் 14.53 அடியாக இருந்தது. இதனிடையே நேற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்ந்ததால் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து தற்போது நீர்இருப்பு 18.89 அடியாக உள்ளது.
ஒருநாள் முதல்வன் பாணியில் ஒருநாள் தலைமை ஆசிரியை; அரசுப்பள்ளியில் அதிரடி ஆய்வு செய்த மாணவி
கோவை மாநகர மக்களின் தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து நீரேற்று நிலையங்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தால் சிறுவாணி அணை விரைவில் முழு கொள்ளளவையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கோவை மாநகர மக்களின் குடிநீர் தேவை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்திருப்பது கோவை மாநகர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.