மனைவியின் நினைவாக அரசுப்பள்ளியை ரூ.1 கோடி செலவில் நவீனமயமாக்கிய தொழிலதிபர்

By Velmurugan s  |  First Published Jun 24, 2024, 6:15 PM IST

கோவை மாவட்டம் சூலூரில் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து ஒரு கோடி ரூபாய் செலவில் அரசு உதவி பெறும் பள்ளியை சீரமைத்து கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


கோவை மாவட்டம், சூலூர் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சில ஆண்டுகளாக பராமரிப்பு குறைவாக இருந்து வந்துள்ளது. இதனை சீரமைக்கும் பொருட்டு தைரோ கார் நிறுவன தலைவரும், இப்பள்ளியின் முன்னாள் மாணவருமான வேலுமணி அவருடன் படித்த 73, 74 ஆம் ஆண்டு மாணவர்களை ஒன்றிணைத்து ஒரு கோடி ரூபாய் செலவில் பள்ளிக்கூடத்தை சீரமைத்துள்ளார். 

மேலும் தனது மனைவி பெயரில் கலையரங்கமும் கட்டிக் கொடுத்துள்ளார். இதனை அவருடைய சக முன்னாள் மாணவர்களுடன் இணைந்து அந்த கட்டிடங்களை பள்ளிக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கட்டிடத்தை ஊராட்சி மன்ற தலைவி சாந்தி ராஜேந்திரன் முன்னிலையில் குழந்தைகளுக்கு வழங்கினார். இந்த விழாவில் பேசிய வேலுமணி, இது போன்ற செயல்பாடுகளால் மாணவர்களின் கல்வித்திறன் மேம்படுவதோடு இப்பகுதியில் சிறந்த பள்ளியாக விளங்குவதற்கு இது உறுதுணையாக இருக்கும். 

Tap to resize

Latest Videos

பட்டப்பகலில் இளம் பெண் கொடூரக்கொலை; பேசுவதை நிறுத்தியதால் ஆண் நண்பர் வெறிச்செயல்

வருங்கால மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். என் வாழ்நாளில் உயர்வுக்கு வழி வகுத்த என் மனைவி, என் அம்மாவின் நினைவாக இதை கட்டிக் கொடுத்துள்ளேன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமசாமி, இந்தப் பள்ளியில் எங்கள் உடன் பிறந்த அனைவரும் படித்தோம். படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். 

ஒரு அரசு உதவி பெறும் பள்ளி அனைத்து வசதிகளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இதை நாங்கள் செய்துள்ளோம். வருங்காலத்தில் இந்த பள்ளி சிறந்த பள்ளியாக விளங்குவதற்கு இது உறுதுணையாக இருக்கும். அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் இதுபோன்ற செயல்களை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

இங்கேயே தீக்குளித்து சாவேன்; திமுக.விற்கு எதிரான போராட்டத்தில் கார் மீது நின்று ஓ.எஸ்.மணியன் ஆவேசம்

இது குறித்து பேசிய ஊராட்சி மன்ற தலைவி சாந்தி ராஜேந்திரன் ஒரு ஊராட்சிக்கு இரண்டரை கோடி ரூபாய் சி எஸ் ஆர் நிதி உதவி மூலம் இது போன்ற செயல்கள் கிடைப்பது நல்ல முன்னெடுப்பிற்கு வழிவகுக்கும் இது மாணவர்களுக்கு உறுதுணையாக உள்ளது ஊராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளும் நவீன முறையாக இது உறுதுணையாக உள்ளது என தெரிவித்தார்.

click me!