மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் "இந்தியா ஒழிக" என பிரிவினயை ஏற்படுத்தும் விதமான வாசகங்களை எழுதியவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையோர தடுப்பு சுவற்றில் "இந்தியா ஒழிக" மற்றும் "இந்தியா நீட் தேர்வை திணிப்பதால் தமிழ்நாடு இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்" என்ற வாசகங்கள் கருப்பு மையில் எழுதப்பட்டிருந்ததை கண்ட ஒருவர், அதனை படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலானதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சுவற்றில் இருந்த வாசகங்களை உடனடியாக அழித்து விட்டு, தேசவிரோத கருத்துக்களை எழுதியவர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டீ குடிப்பதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 தொழிலாளர்கள் ரயிலில் அடிபட்டு பலி
சாலையோர தடுப்பு சுவற்றில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை யார் எழுதினார்கள் என்பதை கண்டறிய போலீசார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். தேசவிரோத பிரிவினைவாத கருத்துக்களை எழுதியவர்கள் யாரென்று கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாற்று திறனாளிகள், முதியோர் உட்பட அனைத்து ஓய்வூதியத்தையும் வாரி வழங்கிய ஆந்திரா முதல்வர்
சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் ஒரு மலைப்பாதை சாலையில் எழுதப்பட்ட இந்தியா ஒழிக என்ற வாசகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கோத்தகிரி வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பை போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரிவினைவாத வாசகங்களை எழுதியவர்கள் யார் என்பதை கண்டறிய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.