மங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம்… குற்றவாளி தங்கியிருந்த கோவை விடுதிக்கு பூட்டு!!

Published : Nov 21, 2022, 05:54 PM IST
மங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம்… குற்றவாளி தங்கியிருந்த கோவை விடுதிக்கு பூட்டு!!

சுருக்கம்

மங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய முகமது ஷாரிக் கோவை விடுதி ஒன்றில் தங்கியிருந்தது தெரியவந்ததை அடுத்து விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்ததை அடுத்து அந்த விடுதி பூட்டப்பட்டது. 

மங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய முகமது ஷாரிக் கோவை விடுதி ஒன்றில் தங்கியிருந்தது தெரியவந்ததை அடுத்து விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்ததை அடுத்து அந்த விடுதி பூட்டப்பட்டது. கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த சனிக்கிழமையன்று ஆட்டோ வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணி காயமடைந்தனர். மேலும் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் மங்களூர் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது முமது ஷாரிக் என்பதும் அவர் தீவிர வாத கும்பலுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: மங்களூர் ஆட்டோ வெடிப்பு சம்பவம்… குற்றவாளிக்கு ஐஎஸ்ஐஎஸ்-யுடன் தொடர்பா? புகைப்படம் வெளியானதால் பரபரப்பு!!

மேலும்  முகமது ஷாரிக் கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் காந்திபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முகமது ஷாரிக் தங்கி இருந்த விடுதியில், பக்கத்து அறையில் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேந்திரன் என்பவர் தங்கி இருந்துள்ளாஅர். இவர்கள் இருவரிடையே பழக்கம் ஏற்பட்டதை அடுத்து சுரேந்திரன் தனது ஆதார் ஆவணங்களை பயன்படுத்தி முகமது ஷாரிக்கிற்கு சிம்கார்டு வாங்கி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: மங்களூரில் ஆட்டோ வெடித்தது விபத்து அல்ல..! தீவிரவாத தாக்குதல்..! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கர்நாடக டிஜிபி

இதை அடுத்து இருவரும் தங்கியிருத்த  விடுதியில் உதகை மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையேஎ விடுதியை பூட்டிவிட்டு விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவை மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விடுதியில் தங்கி இருந்த நபர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, விடுதிக்கு பூட்டு போடப்பட்டது. இதனை தொடர்ந்து விடுதியில் மேலாளர் மற்றும் உரிமையாளர் காமராஜ் ஆகியோர் காட்டூர் காவல் நிலையத்தில்  போலீசார் முன்னிலையில் விசாரணைக்காக ஆஜராக உள்ளனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?