
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகாக சிறப்பு ரயிலில் பயணம் செய்யும் பயணிகளை கோவையிலிருந்து பாஜகவினர் வழியனுப்பி வைத்தனர். தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள பல நூற்றாண்டு பழமையான அறிவுப் பிணைப்பு மற்றும் பண்டைய நாகரிக தொடர்பை மீண்டும் கண்டறியும் வகையில் வாரணாசியில் கடந்த 17 ஆம் தேதி முதல் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையும் படிங்க: 100 நாட்களில் 50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும்..! செந்தில் பாலாஜி உறுதி
டிச.16 ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், கலந்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான ரயில் சேவை கோயம்புத்தூரில் இருந்து இன்று அதிகாலை 4.40 மணிக்கு தொடங்கியது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பயணிகளை கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் ரயிலில் பயணம் செய்தனர்.
இதையும் படிங்க: வங்க கடலில் 65கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று..! 4 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை- வானிலை மையம்
முன்னதாக பயணிகளை கோயம்புத்தூர் மாநகர மாவட்ட பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மலர் தூவி வழி அனுப்பி வைத்தனர். இதுஒருபுறம் இருக்க மறுபுறம் கோயம்புத்தூரிலிருந்து காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ரயில் செல்ல உள்ளதை அடுத்து 200க்கும் மேற்பட்டோர் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.