கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளியின் மாமியாரிடம் இருந்து நகைகள் மீட்பு - போலீஸ் தகவல்

By Velmurugan s  |  First Published Dec 4, 2023, 6:28 PM IST

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் குற்றவாளி விஜயின் மாமியார் கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.


கோவை மாநகர பகுதியில் வழிப்பறி மற்றும் திருடு போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு போத்தனூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு திருடப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

Latest Videos

undefined

இதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, கோவை போத்தனூர் சரகத்திற்கு உட்பட்ட மூன்று காவல் நிலைய எல்லைகளில் பொதுமக்கள் தவறவிட்ட 57 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கோவை மாநகர காவல் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாய்ஸ், மற்றும் கேல்ஸ் கிளப்புகளுக்கான போட்டிகள் நடைபெற உள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

புகையிலையில்லா  மாவட்டம் என்ற இலக்கில் அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பணிகளை தீவிரபடுத்தியுள்ளோம். இதுவரை மாநகர பகுதியில் 20க்கும் மேற்பட்ட கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டு கடையின் வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

சென்னையின் பல பகுதிகளில் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதால் உரிமையாளர்கள் அதிர்ச்சி

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை வழக்கில் தேடப்படும் விஜய்யின் மாமியர் யோகராணியை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடமிருந்தும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

click me!