கோவையில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட முகாம்; அமைச்சர் பங்கேற்பு

By Velmurugan s  |  First Published Dec 2, 2023, 3:45 PM IST

கோவையில் நடைபெற்ற முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளர்களை சேர்க்கும் நிகழ்வில் அமைச்சர் முத்துசாமி பங்கேற்று பயனாளர்களுக்கு காப்பீடு அட்டைகளை வழங்கினார்.


கோவை மாவட்டம் ஆர்எஸ் புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ  காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம்மினை, தமிழக வீட்டு வசதி, நகர் புற  வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் குருபிரபாகரன்,  பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை மேயர் கல்பனா ஆனந்த் குமார், திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் முத்துசாமி, 350க்கும் அதிகமான பயனாளர்களை தேர்வு செய்து அடையாள அட்டைகளை வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள நூறு வார்டுகளிலும்  சிறப்பு முகாம் நடத்தபடுகிறது. மக்கள் பயன் பெறலாம். முதலமைச்சர்  மருத்துவ காப்பீடு திட்டத்தில், 5லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை  செலவு பெற அனுமதிக்கப்படுகிறது. 54 பொது மருத்துவ சிகிச்சை பெறலாம்.

Tap to resize

Latest Videos

undefined

தமிழக அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி குறைவு; இது தமிழக மக்களின் சாபக்கேடு - தமிழக பாஜக தலைவர் விமர்சனம்

தமிழகத்தில் 6 லட்சத்து 52 ஆயிரம் நபர்கள் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை பெற்று உள்ளனர். இன்னும் 5 லட்சம் நபர்களுக்கு கோவை மாநகராட்சி பகுதிகளில் பெற வழிவகை செய்யபடும். அதே போல பள்ளி கல்வியில் இடை நின்ற மாணவர்களை கணக்கிட்டு அவர்களும் கல்வி பயில வழிவகை செய்து வருகிறது தமிழக அரசு. பொது மக்கள் பயன் பெரும் திட்டங்களை மக்களுக்கு உதவிட முன்வரவேண்டும் என்றார்.

click me!