கோவையை உலுக்கிய ஜோஸ் ஆலுக்காஸ் நகை கொள்ளை விவகாரம்; கொள்ளையனுக்கு பக்கபலமாக இருந்த மனைவி

By Velmurugan s  |  First Published Nov 30, 2023, 7:50 PM IST

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை விவகாரத்தில் கொள்ளையனை காவல்துறை நெருங்கிவிட்டதாகவும், இந்த சம்பவத்தில் முழுக்க முழுக்க அவரது மனைவி பக்கபலமாக இருந்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.


கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து தற்பொழுது வரை காவல்துறை மேற்கொண்ட விசாரணை குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த துணை ஆணையாளர்கள் சந்தீஷ், சண்முகம் ஆகியோர் தலைமையில் ஐந்து தனிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

குற்றசம்பவத்தில் ஈடுபட்டவர் விஜய் என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. விஜயின் மனைவி நர்மதாவுக்கு இந்த கொள்ளை சம்பத்தில் பெரும் பங்கு உள்ளது. வெள்ளி, தங்கம், வைரம்  திருடப்பட்டதாக நகைக்கடை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொள்ளடிக்கப்பட்ட விஜயின் மனைவியிடம் இருந்து மூன்று கிலோ நகை மீட்கப்பட்டுள்ளது.

சிறையில் மது அருந்திய தலைமை காவலர்; வீடியோ வைரலான நிலையில் சிறைத்துறை அதிரடி நடவடிக்கை

விஜயை கைது செய்தால் மீதமுள்ள நகைகளும் மீட்கப்படும். மேலும் விஜயின் மீது அரூர் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் இரண்டு திருட்டு வழக்குகள், கோவை ஆர் எஸ் புரத்தில் ஒரு திருட்டு வழக்கு என மூன்று வழக்குகள்  உள்ளன. இந்த கொள்ளை சம்பத்துவிற்கு முழுக்க முழுக்க அவர் மனைவி நர்மதா உடந்தையாக இருந்துள்ளார். தடயவியல் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விஜய் மனைவி நர்மதா மீது எந்தவிதமான வழக்கும் தற்போது வரை இல்லை. கட்டிடம் வேலை நடைபெறுவதால் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு கடையில் உள்ள எச்சரிக்கை அலாரம் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரம் முழுவதும் உயர் தொழில்நுட்பம் உள்ள கேமராக்களை பதிக்க காவல்துறை முயற்சி செய்து வருகிறது. இதுவரை கொள்ளையன் விஜய் பணத்தை மட்டும் திருடியிருந்த நிலையில் தற்போது நகைகளை கொள்ளையடித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் யானை தாக்கி இருசக்கரத்தில் சென்ற வாலிபர் பலி; வனத்துறையினரின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு

தருமபுரி மாவட்டம் அரூரில் விஜய்யை பிடிக்கச் சென்றபோது வீட்டின் ஓட்டை பிரித்து அதன் வழியாக தப்பித்து சென்று விட்டார். இதுவரை விஜய் வெறும் 40 ஆயிரம் ரூபாய் திருடி இருந்த நிலையில் தற்பொழுது கோடிக்கணக்கில் மதிப்புள்ள நகைகளைத் திருடி உள்ளார். மேலும் விஜயை நெருங்கிவிட்டதாகவும் அவரை விரைந்து கைது செய்ய இருப்பதாக தெரிவித்தார். மேலும் திருடப்பட்ட நகைகள் மொத்தம் 4 கிலோ 600 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!