பேருந்து ஓட்டுநரான கோவை பெண்… மக்களிடையே குவிந்து வரும் பாராட்டு!!

By Narendran SFirst Published Mar 31, 2023, 8:39 PM IST
Highlights

கோவையில் பேருந்து ஓட்டுநராக பெண் ஒருவர் பணியாற்றி வரும் சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

கோவையில் பேருந்து ஓட்டுநராக பெண் ஒருவர் பணியாற்றி வரும் சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கோவை காந்திபுரம், சோமனூர் வழியில் பேருந்து ஓட்டி வருகிறார் ஷர்மிளா என்ற பெண். இவரது தந்தை மாகேஷ் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். அவர் அளித்த ஊக்கத்தில் மகேஷ் ஓட்டிய சிலிண்டர் ஆட்டோவை ஓட்டிய  ஷர்மிளா, பின்னர் பேருந்து ஓட்டுநராக வேண்டும் என கனவோடு கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று உரிமமும் பெற்று தற்போது பேருந்து ஓட்டுநராக உள்ளார்.

இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டாராக கோவையை கலக்கும் தனியார் பேருந்து ஓட்டுநர்

இவரது பேருந்தை கடந்து வருவோரும், போவோரும் ஒரு நிமிடம் நின்று ஷர்மிளாவுக்கு வாழ்த்து சொல்வதோடு சிலர் ஷர்மிளாவுடன் செல்பியும் எடுத்துகொள்கின்றனர். இதுக்குறித்து சர்மிளா கூறுகையில், 7 ஆம் வகுப்பு படிக்கும் போது எனக்கு வாகனம் ஓட்ட மீது ஆர்வம் வந்து விட்டது. வீட்டிலும், உனக்கு எதில் விருப்பமோ அதை செய் எனக் கூறி உள்ளனர். இப்போ தான் பேருந்தை கையில் எடுத்து உள்ளேன். ஆனால் 2019 முதலே கோவையில் ஆட்டோ ஓட்டி வந்து உள்ளேன். கனரக வாகன உரிமம் பெறுவதற்கும் என் அப்பா தான் முழு காரணம்.

இதையும் படிங்க: குற்றவாளிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம்... பல்வீர் சிங்-க்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்!!

நீ சாதிக்கனும்னு முடிவு பண்ணிட்டனா சாதிச்சிரு; கோயம்புத்தூர்ல என் பொண்ணு தான் முதல் பெண் பஸ் டிரைவர்னு நான் பெருமையா சொல்லிக்குவேன் என்று தன் தந்தை கூறியதாக தெரிவித்தார். ஷர்மிளா இயக்கும் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவர் கூறுகையில், வழக்கமாக ஆண்கள் மட்டுமே பேருந்து இயக்குவது பார்த்து உள்ளேன். தற்போது முதல் முதலின் இளம் பெண் ஓட்டுவது ஆச்சரியம் அளிக்கிறது என்றார். 

click me!