சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்: 22 நிமிடம் முன்பாக வந்து அசத்தல்!

By SG BalanFirst Published Mar 30, 2023, 5:52 PM IST
Highlights

சென்னை - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சோதனை ஓட்டத்தின்போது திட்டமிட்ட நேரத்திற்கு 22 நிமிடங்கள் முன்பே கோவை ரயில் நிலையத்துக்கு வந்துவிட்டது.

சென்னையில் இருந்து கோவைக்கு இடையே இயக்கப்பட இருக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சோதனை ஓட்டத்தில் 22 நிமிடம் முன்பாவே கோவையை அடைந்தது.

சென்னை - கோவை இடையே இயக்கப்பட இருக்கும் புதிய வந்தே பாரத் அதிவிரைவு ரயிலின் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது. சென்னையில் இருந்து அதிகாலை காலை 5.40 மணிக்கு புறப்பட்ட வந்த பாரத் ரயில் காலை 11.18 மணிக்கு கோவை சென்றடைந்தது. 11.40 மணிக்கு கோவைக்கு வருவதாகத் திட்டமிட்டிருந்த நிலையில், 22 நிமிடங்கள் முன்கூட்டியே கோவை ரயில் நிலையத்தை எட்டியது.

பிரதமர் மோடி படத்துக்கு முத்திட்டு நன்றி தெரிவிக்கும் வயதான விவசாயி!

மொத்தம் 5 மணி நேரம் 38 நிமிட பயண நேரத்தில் சென்னையில் இருந்து கோவைக்கு வந்திருக்கிறது. இதன் மூலம் சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மீண்டும் மதியம் 12.24 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தில் பணியாற்றிய சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் அதில் திரும்பிச் சென்றனர்.

இந்த வந்தே பாரத் ரயிலில் எட்டு பெட்டிகள் மற்றும் 530 இருக்கைகள் இருந்தன. ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் இந்த ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். அதற்குப் பிறகு ரயிலின் திட்டமிடப்பட்ட வருகை மற்றும் புறப்படும் நேரம் முடிவு செய்யப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

பல்வேறு தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகள் சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்த ரயில் வர்த்தகத்தை அதிகரிக்க உதவும் என்று கூறியதுடன், கோயம்புத்தூரில் இருந்து பழனி, மதுரை, திருநெல்வேலி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கும் இதேபோன்ற ரயிலை இயக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு ஓராண்டு கொண்டாடப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்ப

click me!