சென்னையில் இருந்து கோவைக்கு பறந்த வந்தே பாரத் ரயில்

By Velmurugan sFirst Published Mar 30, 2023, 11:39 AM IST
Highlights

சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று காலை சென்னையில் இருந்து தொடங்கியது.

நாட்டின் அதிவேக ரயில் என்ற பெயரை பெற்றுள்ள வந்தே பாரத் ரயில் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவில்லை என்றாலும், சென்னை, பெங்களூரு இடையே இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வருகின்ற 8ம் தேதி சென்னை - கோவை இடையே வந்தே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதற்கான சோதனை ஓட்டமானது இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் 11.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடைகிறது.

அரசு மருத்துவமனை கழிவறையில் பெண் மர்ம மரணம் - காவல் துறை விசாரணை

மறு மார்க்கத்தில் பகல் 12 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் மீண்டும் சென்னையை வந்தடைகிறது. பிரதமர் மோடி வருகின்ற ஏப்ரல் 8ம் தேதி இந்த ரயிலை நாட்டுக்கு அர்ப்பணித்த பின்னர் நாள் தோறும் காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் பகல் 12.10 மணிக்கு சென்னை வந்தடையும். மறு மார்க்கத்தில் பகல் 2.20 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.30 மணிக்கு கோவை வந்தடையும்.

சேலத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; ஒருவர் பலி, 2 பேர் கவலைக்கிடம்

இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!