கோவையில் ரயில் மோதி முதியவர் பலி; உயிரிழந்தவரின் தலை மாயமானதால் காவல்துறை விசாரணை

Published : Mar 29, 2023, 03:25 PM IST
கோவையில் ரயில் மோதி முதியவர் பலி; உயிரிழந்தவரின் தலை மாயமானதால் காவல்துறை விசாரணை

சுருக்கம்

கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகே முதியவர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்த நிலையில், அவரது தலை மாயமானது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் மோதி முதியவர் பலியானார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற ரயில்வே காவல் துறையினர் முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனைத் தொடர்ந்து பலியானது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதியவர் இறந்த இடத்தில் உடல் மட்டுமே கிடைத்த நிலையில் தலைப்பகுதி கிடைக்கவில்லை. அதனை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு உள்ளனர். 

மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரயில் மோதி விபத்தில் உயிரிழந்தாரா ?  அல்லது தற்கொலை செய்து கொண்டாரா வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கோவை KG கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு கத்தி குத்து.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
சித்தப்பா சொல்லி.! கோவையில் 26 வயது இந்திராணியும் 41 வயது நபரும்! வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!